districts

கொட்டாம்பட்டி பேருந்து நிலையத்தை கட்டுவதற்கான வரைபடம் முதல்வருக்கு சென்றுள்ளது

மதுரை, செப்.13- கொட்டாம்பட்டி பேருந்து நிலையத்தை கட்டுவதற் கான வரைபடம் முதல்வர் முக.ஸ்டாலின் கவனத்திற்கு சென்றுள்ளது. விரைவில் முதல்வர் இப்பணிக்கு அடிக்கல் நாட்டுவார் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி.,தெரிவித்தார். மதுரையில் செவ்வாயன்று அவர் செய்தியாளர்க ளுக்கு அளித்த பேட்டியில், மதுரை நாடாளுமன்ற தொகுதியில் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சி யாக மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறோம். அப்படி மக்களை சந்தித்து அவர்களிடம் பெறப்படும் கோரிக்கை மனுக்கள்  மீது முடிந்த அளவிற்கு நட வடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த முறை மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதி யில் ஆய்வு மேற்கொள்ளும் போது கொட்டாம்பட்டி பேருந்து நிலையம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதை தமிழக முதல்வரின் சிறப்பு நிதியி லிருந்து கட்டிக் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் மதுரை வந்தபோது நேரில் சந்தித்து மனு அளித்தேன். அந்த அடிப்படையில் அதற்கான வரைபடம் தயாராகி தற்போது முதல்வர் கவனத்திற்கு சென்றுள்ளது. விரைவில் முதல்வர் அதற்கு அடிக்கல் நாட்டுவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மக்களிடம் பெறப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. என்னிடம் வந்த மனுக்களின் அடிப்படையில் மூன்று திட்டப் பணி களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் 33 லட்ச ரூபாய்க்கான திட்டப் பணிகள் நிறைவுற்றவை துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.  

பின்னர் விவசாயிகள் சிலர்  100 நாள் திட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும். இதனால் விவசாய வேலை கள் பாதிக்கிறது என்று கூறுகிறார்களே? என்ற கேள்வி க்கு பதிலளித்த சு.வெங்கடேசன்,  “இதுவரை யார் அப்படி மனு அளித்துள்ளார்கள் என்று எனக்குத் தெரி யாது. 100 நாள் வேலை விவசாயப் பணிகள் நடை பெறாத காலத்தில்   100 நாள் மட்டும் தான்  நடைபெறு கிறது. விவசாய பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தையும் மேற் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது நிலை பாடு. அதில் ஏதும் பிரச்சனை இருந்தால் அதை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். மின் கட்டணம் உயர்வு குறித்த கேள்விக்கு  பதில ளித்த அவர், “உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசை வலியுறுத்தியுள்ளது என்றார். தெலுங்கானா- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் புதிய கல்விக் கொள் கையை அரசிலாக்கக் கூடாது என்று கூறியுள்ளார்...! என்ற கேள்விக்கு பதிலளித்த சு.வெங்கடேசன், நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். பாஜக பழைய கல்விக் கொள்கையில் இருந்து விலகி புதிய கல்விக் கொள்கையை அரசியலாக மாற்றக் கூடாது. பாஜக புதிய கல்விக் கொள்கையை அரசிய லாக்காமல் கைவிட வேண்டும். மனுவாதம், இந்துத்து வா வாதத்தின் அடிப்படையில் கல்வி கொள்கையை மாற்றக்கூடாது. “புதிய கல்விக் கொள்கை என்ற அரசியலுக்கு” நாட்டின் இளைஞர்களை பலி கொடுக்காதீர்கள்” என்றார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை பற்றிய கேள்விக்கு பதிலளித்த சு.வெங்கடேசன், “இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் பாசிச பாஜகவின் ஆட்சியை முறி யடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்கான பணி களை அவரவர் செய்து வருகின்றனர். அந்த அடிப்ப டையில் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டுள் ளார். பாசிசத்திற்கு எதிராக அனைவரும் ஒற்றுமை யாக இணையும் போது அதை சிறுமைப்படுத்துவ தற்கு பாஜக என்னென்ன வேலைகளை செய்ய முடி யுமோ அதை எல்லாம்  செய்கிறது. அதில் ஒன்று தான் “டீ ஷர்ட்” விமர்சனம் என்றார். பேட்டியின் போது மதுரை புறநகர் மாவட்டச் செய லாளர் கே. ராஜேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் டி.செல்லக்கண்ணு ஆகியோர் உடனிருந்தனர்.

;