தூத்துக்குடி, பிப்.19- தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாணவர் நீக்கத்தைக் கண்டித்து புதனன்று இரண்டாவது நாளாக கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் உண்ணா விரத போராட்டத்தை தொடர்ந்த னர். தூத்துக்குடி காமராஜ் கல்லூரி யில் உயர்த்தப்பட்ட கல்வி கட்ட ணத்தை கண்டித்து கடந்த 2024 ஜூலை மாதம் நடைபெற்ற போராட் ்டத்திற்கு பிறகு மாணவர் சங்க நிர்வாகி நேசமணியை ஒழுங்கு நட வடிக்கை என்ற பெயரில் கல்லூரி நிர்வாகம் நீக்கியுள்ளது. இதனைக் கண்டித்து மாணவர் சங்கத்தினர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை செவ்வாயன்று துவங்கினர். புதனன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் சைலேஷ் அருள்ராஜ், மாவட்ட நிர்வாகிகள் ராம்குமார், மாடசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசும் உயர்கல்வித் துறையும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணம் தொடர்பாக உட னடியான ஒரு விசாரணை கமிட்டி யை அமைத்து, விசாரணை மேற்கொள்ள வேண்டும். மாணவர் நேசமணி நிரந்தர நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். லாபம் சம்பா திக்கும் நோக்கத்துடன் கல்வி கட்டண கொள்ளையில் ஈடுபடும் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தினர்.