districts

img

போதைப்பழக்கத்திலிருந்து மாணவர்களை மீட்டெடுக்க வேண்டும்

மதுரை, செப்.22- போதைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள மாணவர்களை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற கல்வி கொள்கை கருத்துக்கேட்புக்கூட்டத்தில் மாணவர்கள், பெற்றோர் கள் கருத்து தெரிவித்தனர். மதுரை  மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாநில கல்விக்கொள்கை குறித்து மதுரை மண்டல அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம் தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கை உயர்மட்டக்குழுத் தலைவர்- முன்னாள் நீதிபதி டி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் , மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் மற்றும்  மதுரை , தேனி , திண்டுக்கல் , சிவ கங்கை , இராமநாதபுரம் , மற்றும் விருதுநகர் மாவட் டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் , கல்வியாளர்கள், தன்னார்வலர்கள் , தெண்டு நிறுவனங்கள் , ஆசிரி யர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் கலந்துகொண்டனர். கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள்  பேசுகையில், அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும். மாணவர்கள் இடையே ஏற்படும் போதைப் பழக்கத்திலிருந்து  விடுவிக்க வேண்டும். பாடச்சுமையினை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.   

பின்னர்  செய்தியாளர்கள் சந்தித்த குழுத்தலை வர டி. முருகேசன் கூறுகையில்,  திருநெல்வேலியில் நடைபெற்ற  கூட்டத்திலும்  மதுரையில் நடைபெற்ற கூட்டத்திலும் ஒரே கருத்தை அனைவரும் முன் வைத்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி கற்கும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். மாண வர்கள் ஒழுக்கம் சம்பந்தமாக பல்வேறு கருத்துக்கள் வந்துள்ளன. அதில் என்சிசி மற்றும் உடற்கல்வி போன்றவைகளை மீண்டும் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் எங்களி டம் கருத்து தெரிவித்துள்ளனர்.  போதைப் பழக்கத்தி ற்கு மாணவர்கள் அடிமை ஆகிறார்கள். அவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்று கூறினர். இது குறித்து ஆராய்ந்து அரசிடம் நல்ல ஆலோசனை கூறப்படும், பெரும்பாலான மாணவர்களும் பெற்றோர்களும் படிப்புச் சுமை அதிகரித்துள்ளது என்று கூறினர்.  அதையும் இந்த குழு பரிசீலிக்கும். அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று கூறினர். ஆனால் முன்பு இருந்ததை விட தற்போது அரசு பள்ளி களின் தரம் உயர்ந்துள்ளது. நிறைய  மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளியில் சேர்கி றார்கள். எனவே தேவையான அனைத்து முயற்சிகளை யும் இந்தகுழு மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

;