districts

img

இஎம்எஸ் பெயரைக் கேட்டாலே சிலருக்கு பயம்: ஏ.கே.பாலன்

பாலக்காடு, டிச. 1- இஎம்எஸ் என்ற வார்த் தையை கேட்டாலே பயப் படும் சிலர், பெரிந்தல்மன்னா இஎம்எஸ் கூட்டுறவு மருத்துவமனைக்கு எதிராக களமிறங்குகின்றனர். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் துறையின் பத்து பைசாகூட மருத்துவ மனைக்கு செலுத்தவில்லை என்று சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பாலன் தெரிவித்தார். அட்டப்பாடி விரிவான சுகாதாரத் திட்டம் என்பது அட்டப்பாடியில் உள்ள ஆதி வாசிகளின் சுகாதாரப் பாது காப்புக்காக இ.எம்.எஸ் மருத்துவமனை மற்றும் கூட்டுறவுத் துறையால் செயல்படுத்தப்படும் திட்ட மாகும். இதற்காக கூட்டுறவுத் துறை ரூ.11.5 கோடியும், மருத்துவமனை ஒரு கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளன. இத்திட்டம் பழங்குடியினரி டையே சிசு மரணத்தை குறை த்துள்ளது. அவர்களின் சேவை சிறப்பாக இருந்தது. எனினும் நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது கூட்டா ளிகளும் அதை மறுக்கிறார் கள். இந்த நிலைப்பாட்டை யே பாஜகவும் கொண்டுள்ளது. 2013 முதல் 2015 வரை அட்டப்பாடியில் குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. அந்த அளவுக்கு உயராமல் இருப்பதற்கு மருத்துவமனையின் தலை யீடுதான் காரணம். இத் திட்டத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கு மாறு கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

;