districts

img

ஒட்டன்சத்திரம் அருகே நங்காஞ்சியாற்றில் கலக்கும் கழிவுநீர்

ஒட்டன்சத்திரம், ஜூலை 10- ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை யில் நங்காஞ்சி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டு மென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை  கிராமங்களான பாச்சலூரி லிருந்து ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடு, சிறு வாட்டுக்காடு உள்ளிட்ட பகு திகளில் இருந்து சிறு ஓடை ஆறாக மாறி வடகாடு மலைக்கிராமத்தில் உள்ள பரப்பலாறு அணைக்கு தண்ணீர் வருகிறது. அங்கிருந்து, ஒட்டன் சத்திரத்தை சுற்றியுள்ள ஆறு பெரிய கண்மாய்களுக்கு பரப்பலாறு அணையில் இருந்து தண்ணீர் செல்கி றது. இதேபோல் நங்காஞ்சி யாற்று படுகையில் விருப் பாச்சி முதல் ஜவ்வாதுபட்டி வரை அமைந்துள்ள தடுப்ப ணைகள், ஆழ்துளைக் கிணறுகளுக்கும் நீராதார மாக உள்ளது. இடையக்கோட்டையில் நங்காஞ்சியாறு அணையில் தண்ணீர் சேருகிறது. அந்த அணை நிரம்பியவுடன் கரூர்  அமராவதி ஆற்றுக்கு தண்ணீர் சென்று பிறகு கட லில் கலக்கிறது. இந்த நிலையில் இடை யக்கோட்டை மற்றும் ஆற்று  ஓரங்களில் உள்ள கிராமங்க ளின் இருந்து வெளியேற் றப்படும் கழிவுநீர் நங்காஞ்சி யாற்றில் கலப்பதால் ஆற் றின் தண்ணீர் மாசடைந்து சாக்கடை போல் மாறி ஆற்  றில் பல இடங்களில் தேங்கி  நிற்கிறது. ஆற்றில் கழிவு நீர் கலப்ப தால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை அனைவரை யும் கடிப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்  பட்டுள்ளது. விவசாய கிணறு களின் தண்ணீரும் பாதிக் கப்பட்டு வருகிறது. மழைக் காலங்களில் ஆற்றில் தண்ணீர் வரும் போது கழிவுநீரும் சேர்ந்து சென்றுவிடும் தற்போது ஆற்றில் கழிவுநீர் மட்டும் தேங்கி நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.