districts

img

தேனி அருகே பஞ்சமி நிலத்தில் குடியேறும் போராட்டம்

தேனி,செப்.19- தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள பஞ்சமி நிலத்தில் 50 க்கும் மேற்பட்டோர் குடியேறும் போராட்டம் நடத்தினர். பெரியகுளம் வட்டம், வடவீரநாயக்கன் பட்டி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட வட புதுப்பட்டியில் உள்ள பஞ்சமி நிலத்தில் பட்டியல்சாதி மக்கள் குடிமனைப் பட்டா கேட்டு மனுக் கொடுத்து போராடி வருகிறார் கள். வருவாய்த்துறையினர் மேற்படி பஞ்சமி நிலத்தில் உள்ள பட்டவை ரத்து செய்ய கால தாமதம் செய்து வந்த நிலை யில் கடந்த வாரம் குடியேற முயற்சித்த னர். அதிகாரிகள் தலையிட்டு பட்டா கொடுப் பதாக உறுதியளித்தனர். இந்நிலையில் ஜெய்பீம் புரட்சி புலிகள் அமைப்பு சார்பில் 50 க்கும் மேற்பட்டோர் பஞ்சமி நிலத்தில் தார்பாய்களுடன் சென்று குடிசை போட்டு குடியேறும் போராட்டத் தில் ஈடுபட்டனர். பெரியகுளம் வட்டாட்சியர் ராணி, தேனி காவல் துணைக்கண்காணிப்பாளர் பார்த்திபன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னர். கலைந்து செல்ல மறுத்து இரவு வரை போராட்டத்தைத் தொடர்ந்தனர்.