districts

img

தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவரான சேடப்பட்டி முத்தையா புதன்கிழமையன்று  காலமானார்

தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவரான சேடப்பட்டி முத்தையா புதன்கிழமையன்று  காலமானார்.  அவரது சொந்த ஊரான குன்னத்தூர் அருகில் உள்ள முத்தப்பன்பட்டியில் அவரது உடலுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் மதுரை மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், முன்னாள் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், கல்லுபட்டி ஒன்றியச் செயலாளர் வி.சமயன்,  மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.ஏ.இளங்கோவன், வி.முருகன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சி.மணிகிருஷ்ணன், பி.முருகன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அவரது மகன் திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் மு.மணிமாறனுக்கு  ஆறுதல் தெரிவித்தனர்.