மதுரை, ஆக. 7- நியோமேக்ஸ் நிறுவனத்தின் சொத்துக் களை முறைப்படி விற்று முதலீட்டாளர்களி டம் பணத்தை ஒப்படைக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக் கக் கோரி நியோமேக்ஸ் நிறுவனத்தினர் மனுத் தாக்கல் செய்தனர். நியோ மேக்ஸ் நிறுவனத்தைச் சார்ந்த பழனிச்சாமி,பாலசுப்பிரமணியன், அசோக்மித்தா, சார்லஸ், தியாகராஜன் ஆகி யோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மது ரையைத் தலைமையகமாகக் கொண்டு நியோ மேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறு வனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்கு நர்களாக வீரசக்தி, மற்றும் கமலக்கண்ணன் பாலசுப்ரமணியன் எனப் பலர் உள்ளனர். இந்த நிறுவனத்திற்குப் பாளையங் கோட்டை, கோவில்பட்டி, மதுரை, திருச்சி ராப்பள்ளி, தஞ்சாவூர் எனப் பல மாவட் டங்களில் அலுவலகங்கள் செயல்பட்டன. இந்த நிலையில் நியோமேக்ஸ் நிறு வனம் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல்துறை பல்வேறு குற்றப்பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் நீயோ மேக்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அந்த மனுவில், நீயோ மேக்ஸ் குரூப் இதுவரை தென் தமிழகத்தில் 16 லே-அவுட் திட்டங்களில் 9 கோடியே 79லட்சத்து 89ஆயிரம் சதுர அடியில் (2,249.565 ஏக்கர்)க்கான அரசு ஒப்புதல் பெற்றுள்ளது. 15,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எங்களிடம் 4 கோடியே 12 லட்சத்து 65 ஆயி ரத்து 276.35 சதுர அடியில் நிலங்கள் பத்திரப் பதிவு செய்யத் தயாராக உள்ளன. நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர், கோவில்பட்டி, திரு நெல்வேலி, திருவாரூர், இராமநாதபுரம், போடி, பெரியகுளம் பகுதிகளில் சொத்துக் கள் நிலங்கள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் சிலர் நியோமேக்ஸ் நிறு வனம் மோசடி செய்ததாகக் கூறி மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை யிடம் புகார் மனு அளித்தனர். இதனடிப்படை யில் 17 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். எனவே, எங்கள் மீது புகார் அளித்த வர்களுக்கு நிலங்களை வழங்கி பிரச்ச னையைச் சரிசெய்ய விரும்புவதாகவும், இந்தப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை யில் குழு அமைத்து உரிய நடவடிக்கை மற்றும் தீர்வு காண வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி நாகார்ஜூன் முன் திங்க ளன்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிறுவனத்தின் இயக்குநர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் சிலர் தலைமறைவாக உள்ளனர். பலர் முன்ஜாமீன் கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கிட்டத்தட்ட 106 நிறு வனங்கள் பெயரில் பல கோடி ரூபாய் பணம் முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்டுள் ளது இந்தப் பணம் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது வெளி மாநி லங்கள் வெளிநாடுகளிலும் முதலீடு செய்யப் பட்டுள்ளது. எனவே இவர்களைக் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என வாதிட்டார். இதைத் தொடர்ந்து நீதிபதி, நியோ மேக்ஸ் நிறுவனம் பிரச்சனைகளைத் தீர்க்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை யில் குழு அமைக்க மனுத் தாக்கல் செய்துள் ளது. ஏன் அவர்கள் இது தொடர்பாக விசா ரணை நடத்தும் காவல்துறையினரிடம் ஏன் சர ணடையவில்லை. விசாரணை அதிகாரிகளி டம் உரிய ஆவணங்களை ஒப்படைத்து இந்தக் கோரிக்கையைக் கேட்டிருக்கலாமே எனக் கேள்வி எழுப்பினார். மேலும் மனு குறித்து மாவட்ட குற்ற வியல் காவல்துறையினர் விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.