districts

img

தூய்மைத் தொழிலாளர் காத்திருப்புப் போராட்டம் வேலை நிறுத்தம் தொடங்கியது

திருநெல்வேலி , செப். 24 நெல்லை மாநகராட்சி அதிகாரிகள், துப்புரவு பணி யாளர்களிடம் நவீன தீண்டாமையை கடைபிடிப்பதாக கூறி 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், பணிகளை புறக்கணித்து மாநகராட்சி வளாகத்தில் சனிக்கிழமை  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் நெல்லை மாநகராட்சி 4 மண்டலங்களாக பிரிக்கப் பட்டு அதில் மொத்தம்  55 வார்டுகள் உள்ளன.  நாள்தோ றும் காலை மற்றும் மாலை வேளைகளில் மொத்த முள்ள 55 வாடுகளிலும் 700 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலை யில் மாநகராட்சி நிர்வாகம் சனிக்கிழமை முதல் பயோ மெட்ரிக் முறையில் தூய்மை பணியாளருக்கான வருகை பதிவேற்றி மாற்றி உள்ளது. இதனால் வழக்க மான முறை மாற்றம் செய்யப்படுவதால், கையெழுத்து ஒரு அலுவலகத்தில் போட்டுவிட்டு வேலை செய்வ தற்கு உள்ள வார்டுக்கு அதிக தூரம் பயணம் செய்ய வேண்டிய சூழல் மற்றும் பணிச்சுமையும்  ஏற்படுவதாக பணியாளர்கள் கூறுகின்றனர். மேலும் குப்பை சேக ரிக்கும் பேட்டரி வாகனத்திற்கு சார்ஜ் போடுவதற்கு மண்டல அலுவலகம் வரக்கூடாது. அந்தந்த பகுதிக ளில் தற்காலிக சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும்

என அதிகாரிகள் கூறுகின்றனர் .பேட்டரியில் இயங்கும் குப்பை சேகரிக்கும் வண்டிக்கு சார்ஜ் போடுவதற்கு இடம் தேடி அலைவதெல்லாம் மேலும் பணிசுமையை அதிகரிக்கும் செயல் என வேதனை தெரிவிக்கின்றனர். தூய்மை பணியாளர்களிடம் நவீன தீண்டா மையை கடைபிடிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த  புதிய வருகை பதிவேட்டு பயோமெட்ரிக் முறையை ரத்து செய்து பழைய முறையில் தொடர வேண்டும். பணியின் போது உயிரிழந்த தூய்மை பணியாளர்களு க்கு உரிய இழப்பீடு கிடைப்பதற்கான வழிவகை செய்ய வேண்டும் அனைத்து தூய்மை பணியாளர்க ளுக்கும் ஓய்வூதிய தொகை முறையாக கணக்கில் செலுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கோரி மாநகராட்சி அலுவலக வாச லில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.  இந்த போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலா ளர் ஆர்.மோகன் தலைமை தாங்கி னார்.  தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு ஏற்படும் வரை பணிக்கு செல்வதில்லை எனக்கூறி 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலக வாசலில் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்ற னர். போராட்டத்தில் சி.ஐ.டி.யு நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட பொது செயலாளர் மாரியப்பன் ,பொருளாளர் செல்ல துரை, நிர்வாகிகள் சிவராமன், மாடசாமி, நாகராஜன், சின்னதம்பி உட்பட கலந்து கொண்டனர்.

;