districts

மதுரை முக்கிய செய்திகள்

உப்பு நிறுவனத்  தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம், செப்.19- ஊதிய உயர்வு பிரச்சனையை உடனடியாக முடி வுக்குக் கொண்டு வர வேண்டும். உப்பு உற்பத்தியை அதி கரிக்க கூடுதலான ஆட்களை வேலையில் சேர்க்க வேண் டும். காலையில் பணிக்கு வருவதற்கு கால நிர்ணயம் செய்வதைக் கைவிட வேண்டும். ஐஎஃப்எஸ் பகுதியில் ஆட்டோமேட்டிக் இயந்திரம்  பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன தொழி லாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் தமிழ்நாடு உப்பு நிறுவன அலுவலகம் முன்பு  சங்கத் தலைவர் கே.பச்சமால்  தலை மையில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, உப்பு நிறுவன சங்க செயலாளர் வி. குமரவடிவேல், வடிவேல், காட்டு ராஜா உட்பட 200-க்கும்  தொழிலாளர்கள் கலந்து கொண்ட னர். செப்.28-ஆம் தேதிக்குள் ஊதிய உயர்வு வழங்கா விட்டால் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவ தாக உப்புத் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

மாரியப்பன் காலமானார்

திண்டுக்கல். செப்.18- திண்டுக்கல் ஒன்றியம் நல்லமநாயக்கன்பட்டி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  மூத்த தோழர் மாரியப்பன் கால மானார். அவரதுக்கு வயது 70.  அன்னாரது மறைவு செய்தியறிந்து கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலா ளர் ஆர்.சச்சிதாந்தம், மாவட்டக்குழு உறுப்pபினர் ஆஸாத், நகர் செயலாளர் அரபுமுகமது. ஒன்றியக்குழு உறுப்பினரகள் ராஜாமணி, ஆசைத்தம்பி, ஒன்றியக் கவுன்சிலர் செல்வநாயகம் ஆகியோர் அன்னாரது இல்லத் திற்குச் சென்று அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.இவர் தோழர் சுப்பம்மாவின் கணவர்ஆவார்.

சிலை வைத்த பிரச்சனையில் அதிகாரிகள், காவல்துறையினர்  மாற்றம்

திருவில்லிபுத்தூர், செப்.19-  திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம் அமச்சி யார்பட்டி பகுதியில் அரசு மற்றும் நீதிமன்றத்தின் உரிய அனுமதி பெறாமல் கடந்த 10- ஆம் தேதி  சிலை ஒன்று அமைக்கப்பட்டது.  முறையாக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்காத காரணத்தால்  திருவில்லிபுத்தூர் வட்டம் மம்சாபுரம் வாழைகுளம் கிராம நிர்வாக அலுவலராக பணி புரிந்து வந்த வேல்ராஜ், கந்தராஜ் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் சமுத்திரராஜன் ஆகியோர் வத்தி ராயிருப்பு தாலுகாவிற்கும்,  வத்திராயிருப்பு தாலுகாவில் பணிபுரிந்த வந்த காளியப்பன் மற்றும் முத்துப்பாண்டி யன் ஆகிய இருவரும் மம்சாபுரம் வாழைகுளத்துக்கு கிராம நிர்வாக அலுவலராகவும்  மற்றும் முள்ளிக்குளம் கிராம நிர்வாக உதவியாளர்  மாரிமுத்து ஆகியோரை பணியிட மாற்றம் செய்து சார் ஆட்சியர் பிருத்திவிராஜ் உத்தரவு பிறப்பித்தார்.  மம்சாபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சார்பு ஆய்வாளர் ஆனந்தகுமார் ரெட்டியபட்டிக்கும், திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்த வேலுச்சாமி கூமாபட்டி காவல் நிலையத் திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க அமைப்புதினம் கடைப்பிடிப்பு

விருதுநகர், செப்.19- தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் 23- ஆவது அமைப்பு தினம் திருவில்லி புத்தூர், இராஜபாளையத்தில் கொண்டாடப்பட்டது திரு வில்லிபுத்தூரில் கணேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  இளையராஜா சங்க கொடியை ஏற்றினார் அரசு ஊழியர் சங்கக் கொடியையும் அரசு ஊழியர் சங்க கொடியை மாவட்ட இணைச்செயலாளர் ராஜகுருவும் ஏற்றி வைத்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் பாலமுருகன், அகில இந்திய அரசு ஊழியர் சங்க கொடியை ஏற்றி வைத்தார் ஹரி பாலகிருஷ்ணன் சிறப்பு ரையாற்றினார்.  இராஜபாளையத்தில் கருமலை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் முத்து வெள்ளையப்பன் வட்டக்கிளை பொ ருளாளர் பாண்டி மாநிலச் செயலாளர் ஹரிபால கிருஷ்ணன்  ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். கொடியேற்றத்தை தொடர்ந்து அங்கன்வாடி குழந்தை களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கூட்டுறவு சங்கம் சார்பில் கல்வி விழிப்புணர்வு விழா

கடமலைக்குண்டு, செப்.19- மயிலாடும்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நிதி சார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. மயிலாடும்பாறை கூட்டுறவு சங்கத் தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். கள அலுவலர் சௌந்தர ராஜன் முன்னிலை வைத்தார். மயிலாடும்பாறை குமணன் தொழு, மந்திச்சுணை மூலக்கடை, நரியூத்து, தங்கம்மாள் புரம், முத்தாலம்பாறை, உள்ளிட்ட ஆறு ஊராட்சிக ளுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.  இந்த முகாமில் கடன் திட்டங்கள், மாற்றுத்திறனாளி கள், மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் கைம்பெண்கள் கடன் திட்டங்கள் குறித்தும், வைப்பு நிதித் திட்டங்கள், காப்பீட்டுத் திட்டங் கள் குறித்தும் விளக்கப்பட்டது.  கள மேலாளர் சிங்க ராஜ், சரக மேற்பார்வையாளர் ராஜா, கிளை மேலாளர் மூர்த்தி, சங்க செயலாளர்கள் வெங்கடாசலபதி, பொன் பாலூ, உரம் பொறுப்பாளர் பழனிச்சாமி, உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்,

திருவில்லிபுத்தூரில் விபத்து; இருவர் பலி

திருவில்லிபுத்தூர், செப்.19-   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள எம்.பி.கே. புதுப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் சந்தனகிருஷ்ணன் (55) இவர் சொந்தமாக  நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை தயாரிக் கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி (45) சம்பவத்தன்று இரவு சந்தானகிருஷ்ணன் மதுரையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம்  படித்து வரும் தனது மகள் இந்துஜா (25)-வை  அழைத்துக் கொண்டு திருவில்லிபுத்தூர் திரும்பிக்கொண்டிருந்தார். திருவில்லிபுத்தூ ஆவின் நிறுவனம் அருகே ரோட்டோ ரம் இருந்த புளிய மரத்தில் கார் மோதி விபத்துக்குள் ளானது. இதில் சந்தானகிருஷ்ணன் மனைவி ராம லட்சுமி  ஆகியோர் அவரது மகள் இந்துஜா பலத்த காய மடைந்து ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். திருவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீட்தேர்வு விடைத்தாள் குளறுபடி கார்பன் காப்பியை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை, செப்.19-  நீட் தேர்வு விடைத்தாளில் ( ஓஎம்ஆர்) குளறுபடி நடந்துள் ளது உரிய விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திருநெல்வேலி யைச் சார்ந்த மாணவர் எவல்ட் டேவிட் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் 12 ஆம் வகுப்பு முடித்து  கடந்த ஜூலை 17 லில் நடைபெற்ற இளநிலை மருத்துவர் படிப்பிற்கான நுழைவு தேர்வு நீட் தேர்வில் பங்கு பெற்றேன் தேர்வை நல்ல முறையில் எழுதி இருந்தேன். இந்நிலையில் நீட் தேர்வு முகமை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் கேள்விக் கான விடைகளை  வெளியிட்டது அதில்  எனக்கு 720 மதிப் பெண்களுக்கு 670 மதிப்பெண்கள் விடைகள் சரியாக இருந்தது. இந்நிலையில் நீட் தேர்வு முகமை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் பதில் எழுதிய ஓஎம்ஆர் விடைத்தாள்  பக்கங்களை பதிவேற்றம் செய்துள்ளது. அதை பார்த்த  எனக்கு பயங்கர அதிர்ச்சியானது. அந்த ஓஎம்ஆர் பதில் தாள் என்னுடையது அல்ல அதில் எனக்கு 115 மதிப்பெண் கள் மட்டுமே வரும் அந்த ஓஎம்ஆர் விடைத் தாள் நான் எழுதியது இல்லை எனது விடைத்தாள் திருடப்பட்டு உள்ளது இதில் ஏதோ குளறுபடி நடந்துள்ளது எனவே எனது அசல் ஓஎம்ஆர் விடைத்தாள் மற்றும் கார்பன் நகல் ஆகியவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்  எனது விடைத்தாள் மோசடி  குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மருத்துவக் கலந்தாய்வில் எனக்கான ஒரு இடம் ஒதுக்கீடு செய்து உறுதிப்படுத்த வேண்டும்” என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன் திங்க ளன்று  விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீட் தேர்வு முகமை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாணவர் எழுதிய நுழைவுத் தேர்வின் ஓஎம்ஆர் சீட்டை நீதிபதி முன் தாக்கல் செய்தார். ஆனால் நீதிபதி பிறபித்த உத்தரவில் ஓஎம்ஆர் ஷீட்  மற்றும் அதன் கார்பன் காப்பியும் இணைத்து தான் தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டி ருந்தது. ஆனால்  ஓஎம்ஆர் சீட்டின் கார்பன் காபி தாக்கல் செய்யப்படவில்லை.  இதைப்பார்த்த நீதிபதி ஓஎம்ஆர் சீட்டின் கார்பன் காபி ஏன் தாக்கல் செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பிய தோடு, மனுதாரரின் கோரிக்கையே இதில் முறைகேடு நடந்துள்ளது என்பதுதான் எனவே ஓஎம்ஆர் சீட்டின் கார்பன் காப்பியை வரும் வெள்ளிக்கிழமை  அவசியம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை க்கு ஒத்திவைத்தார்.

தேனி ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  தற்கொலைக்கு முயன்ற தாய், மகள்

தேனி ,செப்.19- பணத்தை அபகரித்த உற வினர், வீட்டையும் போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்ய முயற்சிப்பதாகக் கூறி தேனி  ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தாய், மகள் இருவரும் மண்ணெண் ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.  பெரியகுளம் அருகே கைலாச பட்டியைச் சேர்ந்தவர் ராஜு மனைவி அம்மாலு (67).இவர் திங்களன்று நடைபெற்ற மனுநீதி நாள் முகாமிற்கு தனது மகளுடன் தேனி ஆட்சியர் அலுவலகம் வந்தார். நுழைவு வாயிலில் இருந்த  காவலர்கள் அவர்கள் கொண்டு வந்த பையை சோதனையிட  முயன்றனர். அப்போது பையில் இருந்த மண்ணெண்ணையை  உடலில் ஊற்றினர். அப்போது பணியில் இருந்த காவல்துறை யினர் தடுத்து நிறுத்தி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . விசாரணையில் அம்மாலு வின் உறவினர் பாலமுருகன் என்ப வர் ரூ 5 லட்சத்தை கடன் பெற்று திரும்பத் தர மறுத்ததோடு, குடியி ருந்து வரும் வீட்டை போலி ஆவணம் தயாரித்து அவருடைய அம்மா பெயருக்கு மாற்றி வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும்,  இது குறித்து தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நட வடிக்கை எடுக்காமல் அலைக் கழிப்பதாவும் வேறு வழியின்றி தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார்.

டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை

விருதுநகர். செப்,19- விருதுநகர் மாவட்டம் சேத்தூர் பேருந்து நிலையம் அருகே மக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அப்புறப்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே, அர்ஜூனன். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ. குருசாமி. காங்கிரஸ். மதிமுக. விசிக. புதிய தமிழகம். பார்வர்டு பிளாக் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண்கhணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர், அம்மனுவில் கூறியிருப்பதாவது:  சேத்தூர் பேருந்து நிலையம் அருகே. டாஸ்மாக் கடை உள்ளது, இக்கடை யால் மக்களுக்கும் போக்குவரத்திற்கும் பெரும் இடை யூறு உள்ளது, மதுப்பிரியர்கள். நடுரோட்டில் குடித்து விட்டு பாட்டிலை உடைக்கின்றனர், பேருந்துகளை செல்ல விடாமல் தடுக்கின்றனர்.  இக்கடை அருகே வங்கி. மருத்துவமனை. மருந்துக் கடை. உணவுக் கூடங்கள் உள்ளன, இதனால் அங்கு செல்லும் பெண்கள் பெரும் பாதிப்படைகின்றனர், இக் கடையை அகற்றக் கோரி பலமுறை போராட்டம் நடத்தி செப்,.15க்குள் அகற்றி விடுவோம் என எழுதிக் கொடுத்த பின்பும் அரசு அதிகாரிகள் அகற்ற மறுக்கின்றனர், எனவே. அக்கடையை அகற்ற மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மறுக்கும் பட்சத்தில் வரும் அக்டோபர் 3-ம் தேதி டாஸ்மாக் கடையை அகற்றும் வரை காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும் என அந்த  மனுவில் தெரிவித்துள்ளனர்.

புகைப்படக் கண்காட்சி திறப்பு

சின்னாளபட்டி, செப்.19- திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் திங்களன்று சுதந்திர தின அமுதபெருவிழாவை  கொண்டாடப்பட்டது. அப்போது அரசியல் அறிவியல் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் வேலு நாச்சி யார், ஜான்சி ராணி, மருது சகோதரர்கள், ராணி மங்கம் மாள், வீரபாண்டிய கட்டபொம்மன், உட்பட 40 சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படக் கண்காட்சியை ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திறந்து வைத்தார். பின்னர் பல்கலைக்கழகத்தில்  உள்ள காந்தி மியூசியத்தையும் பார்வையிட்டார்.  இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் முருகன், காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை,  துணைவேந்தர் கூடுதல் (பொறுப்பு) குர்மீத்சிங் ஆகி யோர் கலந்து கொண்டனர். ராணுவ வீரர் கொலை: 

ராணுவ வீரர் கொலை: குற்றவாளிகளை கைது  செய்ய கோரிக்கை 

தேனி, செப்.19- தேனி மாவடடம் சின்னமனூர் அருகே சுக்காங்கல்பட்டி யை சேர்ந்த நல்லம்மாள் என்பவர் தனது மகன் தழி கருப்பசாமி என்பவர் ராணுவத்தில் பணியாற்றி வந்த நிலையில் 2014- ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் பொந்தூர் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட தாகவும், காவல் உதவி ஆய்வாளர் கருப்பசாமி பாண்டி யன் உள்ளிட்டோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.  நகை கேட்டு மனு சுக்காங்கல்பட்டியை சேர்ந்த பெண்கள் பத்துக்கும் மேற்பட்டோர் தேனி ஆட்சியரிடம் அளித்த புகாரில், கோபால்நாயக்கன்பட்டி தொடக்க வேளாண் கடன் சங்கத்தில் நகை அடகு வைத்து கடன் பெற்றதாகவும், நகைக் கடன் தள்ளுபடி பட்டியலில் இடம்பெறவில்லை. நகையை கேட்டால் தர மறுப்பதாகக் கூறி மனு அளித்தனர்.

போடி மெட்டு மலைச்சாலையில் விபத்து; இளைஞர் பலி

தேனி, செப்.19-  போடிமெட்டு மலைச்சாலையில் ஞாயிறன்று இரவு இரு சக்கரவாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். நண்பர் காயமடைந்தார். தேனி வீரபாண்டி மேலத்தெருவைச் சேர்ந்தவர் மாரிச்சாமி மகன் தாமரைக்கண்ணன் (24).  வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகன் மனைவி அர்ச்சனா (23). இருவரும் நண்பர்கள். தாமரைக் கண்ணன் தனது இருசக்கர வாகனத்தில் அர்ச்சனா வை அழைத்துக் கொண்டு கேரளா சென்று விட்டு போடி மெட்டு மலைச்சாலையில் திரும்பிக் கொண்டிருந்தார். போடிமெட்டு மலைச்சாலையில் ஐந்தாவது கொண்டை ஊசி வளைவு அருகே வரும்போது போடியி லிருந்து கேரளா சென்ற டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் உடல் நசுங்கி தாமரைக் கண்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். அர்ச்சனா பலத்த காயமடைந்தார். விபத்து குறித்து தாமரைக்கண்ணனின் தாயார் இந்திராணி  (48) கொடுத்த புகாரின் பேரில் போடி குரங்கணி காவல் துறை யினர் டிப்பர் லாரியை ஓட்டி வந்த கேரள மாநிலம் வண்டிப் பெரியார் என்ற ஊரை சேர்ந்த கோபி மகன் பினிஸ் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைப்பு

பழனி, செப்.19- பழனியைச் சேர்ந்தவர் பூபாலன். இவர் மீது பல்வேறு கொலை , கொள்ளை மற்றும் அடிதடி வழக்கு கள் நிலுவையில் இருந்து வருகிறது.  சமீபத்தில் மாமுல் கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டிய வழக்கில் சிறைக்குச் சென்றுள்ளார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் பரிந்துரையின்  பேரில் மாவட்ட ஆட்சியர்  விசாகன் குண்டத் தடுப்புச் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

சிறுமி குடும்பத்திற்கு  தேனி ஆட்சியர் ரூ.1 லட்சம் உதவி

தேனி,செப்.19- தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகே ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் பூங்கா அமைப்பதற்காக தோண் டிய குழியில் தேங்கிய தண்ணீரில் தவறி விழுந்து ஹாசினி ராணி ( 8) என்ற சிறுமி கடந்த 6-ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சிறுமி யின் உயிரிழப்பு குறித்து நீதி கேட்டு, மருத்துவர் சமூ கத்தை சேர்ந்தவர்கள் தொ டர்ந்து போராடி வந்த னர். இந்நிலையில் கடைய டைப்பு போராட்டம் நடை பெறும் என அறிவித்த நிலை யில் இறந்த சிறுமி குடும்பத் திற்கு ரூ.1 லட்சம் நிவார ணம், அரசு வேலை வாய்ப் பில் முன்னுரிமை வழங்கப் படும் என தேனி மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். இந்த வழக்கு தொடர் பாக விசாரணை செய்து வந்த ஓடைப்பட்டி காவல்துறை யினர் சந்தேக மரணத்தை மாறுதல் செய்து,  ஒப்பந்தத் தாரர் கம்பத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் பாலமுரு கன், நிறுவனப் பொறியா ளர்  வேம்பு பிரபு, மேற் பார்வையாளர் ராகுல் நேரு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.




 

;