districts

img

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ரத்த கையெழுத்து இயக்கம்

சின்னாளபட்டி, அக்.1- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள்  சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணி யன் மீது கடந்தகால ஆட்சியாளர்களால் சுமத்தப்பட்ட  உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டை ரத்து செய்து  அவருக்கு ஓய்வுகால பலன்களை அரசு முழுமையாக  வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வத்தலக்குண்டு வில் ரத்த கையெழுத்து  இயக்கம் நடைபெற்றது. சங்க தலைவர் சோலைமலை தலைமை வகித் தார். செயலாளர் அருண் பிரசாத் முன்னிலை வகித்  தார். திண்டுக்கல் மாவட்ட சங்கம் சார்பாக முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியனுக்கு ஒரு லட்சத்து  ஐம்பதாயிரம் ரூபாய் நிதியுதவி மாநிலப் பொருளாளர் விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டது. அதைத்தொட ர்ந்து உறுப்பினர்கள் 50 பேரும் கோரிக்கை மனுவில் ரத்த கையெழுத்திட்டுதமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய  கருப்பன் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.  பொருளாளர் மோகன்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

;