திண்டுக்கல், அக்.3- மாநில அளவிலான (2022-23- ஆம் ஆண்டு) ஜூனியர் மற்றும் சீனியருக்கான பத்தாவது ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள் சின்னாளபட்டி ராஜன் விளை யாட்டு அரங்கத்தில் தொடங்கியது. ரோல்பால் போட்டியில் செங்கல்பட்டு, சென்னை, கூடலூர், தர்மபுரி, கோயம்புத் தூர், திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நீல கிரி, சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, தூத்துக் குடி, திருச்சி, திருவள்ளூர், திருவாரூர், விருதுநகர் நாமக்கல், திருப்பூர் என மொத்தம் 19 மாவட்டங்களிலிருந்து 17 வய துக்கு மேற்பட்ட சீனியருக்கான போட்டி யில் 11 ஆண்கள் அணிகளும், நான்கு பெண்கள் அணிகளும் பங்கேற்கின்றன. போட்டிகள் லீக் நாக் அவுட் முறையில் நடை பெறும். 17 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் 16 ஆண்கள் அணிகளும் ஆறு பெண்கள் அணிகளும் பங்கேற்கின்றன. ஜூனியருக்கான போட்டிகள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும். மதுரை- கோவை அணிகளுக்கு இடையே நடைபெற்ற சீனியர் ரோல்பால் போட்டியில் மதுரை அணி வெற்றி பெற்றது. கடலூர்-விருதுநகர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் கடலூர் அணி வெற்றி பெற்றது. திண்டுக்கல் தர்மபுரி அணிகளுக்கு இடையேயான போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது. திருச்சிராப்பள்ளி தூத்துக்குடி அணிக ளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் திருச்சிராப்பள்ளி அணி வெற்றி பெற்றது. போட்டியை ரோல்பால் அசோசி யேஷன் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வாஞ்சிநாதன் துவக்கிவைத்தார். சிறப்பு விருந்தினராக காந்திகிராம் பல்கலைக் கழக பேராசிரியர் சுகுமார் கலந்து கொண்டார்.