தேனி ,செப்.15- மின்கட்டண உயர்வை மாநில அரசு திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேனி மின் வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏழை,எளிய ,நடுத்தர மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் .காற்றாலை மின்சார உற்பத்தியை முறைப்படுத்தியும், இது தொடர்பான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி மின் வாரியத்தை பாது காக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் ஏ.வி.அண்ணா மலை தலைமை வகித்தார்.மாநில செயற்குழு உறுப்பி னரும், திண்டுக்கல் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பி னருமான கே.பாலபாரதி சிறப் புரையாற்றினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், கே.ஆர். லெனின், இ.தர்மர் ஆகி யோர் பேசினர் .மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமச்சந்திரன், சு.வெண் மணி, டி.கண்ணன், மூத்த தலைவர்கள் கே.ராஜப்பன், எல்.ஆர்.சங்கரசுப்பு, எஸ். கே.பாண்டியன், இடைக் கமிட்டி செயலாளர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். பின்னர் மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலு வலகத்தில் தலைவர்கள் மனு அளித்தனர்.