தேனி, ஜூலை 12- தேனி மாவட்டத்தில் நெடுஞ் சாலைத்துறையின் சார்பில் ரூ. 6.92 கோடி மதிப்பீட்டில் நடை பெற்று வரும் சாலை மேம்பாட்டு பணிகளை ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா ஆய்வு செய்தார். ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஓடைப்பட்டி முதல் தென்பழனி வரை ரூ.402 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தப்பட்டு தரம் உயர்த்தி தார்சாலை அமைக்கும் பணிகளையும், மூர்த்திநாயக் கன்பட்டி-ஆனைமலையான் பட்டி சாலையில் ரூ.113 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலையினையும், சின்னமனூர்-சின்ன ஓவுலாபுரம் சாலையில் ரூ.77 இலட்சம் மதிப் பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் உத்தமபாயைம்-போடேந்திரபுரம் சந்திப்பு பகுதி யை விரிவாக்கும் செய்து மேம்படுத்தும் பணிகளையும், ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கம்பம் நகர பேருந்து நிலை யத்தில் பேருந்துகள் நின்று செல்ல வசதியாக சாலை மேம் பாட்டு பணிகளையும் பார்வை யிட்டார். முன்னதாக, அடிக்கடி விபத்து ஏற்படும் தேனி-போடி நாயக்கனூர் நான்கு வழிச்சாலை மற்றும் புறவழிச்சாலை சந்திப்பு பகுதியில் விபத்துகள் ஏற்படா மல் தடுப்பதற்கு நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சி யர் அவர்கள் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். உதவி கோட்டப்பொறியாளர் (உத்தமபாளையம்) திரு. ராஜா, உதவி பொறியாளர் வைரக் குமார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவர்கள் உடனிருந்த னர்.