திண்டுக்கல், டிச.18- திண்டுக்கல்லில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதர வாக தொழிலாளர் நல சட்டங்களை திருத்துவதை கைவிட வேண்டும். தேசிய பணம் ஆக்கங்கள் என்ற பெயரில் ரயில்வே, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவ னங்களை தனியார் மயமாக்கு வதை கைவிட வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட் டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி பிப்ரவரி மாதம் 23, 24 தேதி களில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திண்டுக் கல்லில் ஆரோக்கிய மாதா தெரு வில் உள்ள போக்குவரத்து சங்க மீட்டிங் ஹாலில் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க சார்பில் அழகர் சாமி தலைமை வகித்தார். எல்பி, எஃப், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டி யுசி, மறுமலச்சி தொழிலாளர் சங்கம், டியூசிசி உள்ளிட்ட தொழிற் சங்கத்தினர் மாநாட்டில் பங்கேற்றனர். எல்பிஎப் மாநில தலைவர் பஷீர் அகமது மற்றும் சென்றாயன், சிஐ டியு மாவட்ட செயலாளர் கே.ஆர்.கணேசன், மாவட்ட தலைவர் பிரபா கரன், ஏஐடியூசி ஜெயமணி ஐடிசி நாகராஜன், உமாராணி, எம்எல்எப் பசும்பொன் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.