districts

காரைக்குடியிலிருந்து கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்கிடுக!

சிவகங்கை, ஜூலை 9- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி யிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் அழகர்சாமி ரயில்வே பொது மேலாளருக்கு மனு அனுப்பியுள்ளார்.  அவர் அனுப்பிய மனுவில், காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி, பட்டுக்கோட்டை , மயிலாடுதுறை, கட லூர், விழுப்புரம் வழியாக சென்னைக்கு  ஏற்கனவே கம்பன் விரைவு ரயில் இயக்கப்பட்டது. அகல ரயில்பாதைப் பணிக்காக இந்த ரயில் நிறுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது அகல ரயில் பாதைப் பணி முடிவடைந்து விட்டது. ஆனால் ரயில்  மீண்டும் இயக்கப்படவில்லை. அதிக  மக்கள் பயணிக்கும் இந்த ரயில்வழித் தடத்தில் கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று  மக்கள், வணிகர்கள் வலியுறுத்துகின்ற னர். மக்கள் நலன் கருதி உடனே ரயிலை இயக்க வேண்டும்.  காரைக்குடி ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் தேவையான இடத்தில் அமைக்கப்படவில்லை. நடைமேடை 2,நடைமேடை3 வந்து நிற்கும் ரயிலில் இருந்து இறங்கும் பயணிகள் 500 மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். பழைய மேம்பாலத்தில் ஏறி, இறங்கி மீண்டும் அதே 500 மீட்டர் தூரம் நடந்து ரயில் நிலையத்திலிருந்து வெளியே வர வேண்டும். இரவு நேரங்க ளில் பெண்கள், குழந்தைகள், வயதான வர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி றார்கள். மேலும் பாதுகாப்பற்ற நிலை யும் உள்ளது. எனவே பயணிகள் நலன் கருதி புதிய ரயில் நிலையத்தின் மையப்பகுதியில் உடனடியாக நடை மேடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

;