திருவொற்றியூர், டிச. 15- சாலையோர வியாபாரி களுக்கு மாற்று இடம் வழங்க கோரி விம்கோ மார்க்கெட் சாலையோர வியாபாரிகள் வட்டாட்சியர் அலுவலகம் அருகே புதனன்று (டிச. 15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் விம்கோ மார்கெட்டில் கடந்த 50 ஆண்டுகளாக சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர் கள் சாலையோரம் வியா பாரம் செய்து வருகின்ற னர். தற்போது விம்கோ ரயில்வே கேட் சுரங்கப் பாதை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. இந்த திட்டத்தை காரணம் காட்டி திருவொற்றியூர் வட்டாட்சி யர் சிறு கடைகளை அப்புறப் படுத்த நோட்டீஸ் வழங்கி யுள்ளார். இதுகுறித்து சிஐடியு வட சென்னை மாவட்ட செயலா ளர் ஆர்.ஜெயராமன் கூறு கையில், பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக் கும்போது சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்காமல் அப்புறப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சுரங்கப்பாதை அமைக்க கூடாது என்பது வியாபாரி களின் கருத்தல்ல. விம்கோ ரயில் நிலையத்தில் இருந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலை செல்ல சர்வீஸ் சாலை நிச்சயம் அமைக்கப்படும். அந்த சாலை ஓரத்தில் இவர்கள் இப்போது வியாபாரம் செய்வது போலவேதொடர முடியும். எனவே பக்கத்தில் அமையவிருக்கும் சர்வீஸ் சாலையில் வியாபாரம் செய்து கொள்ள மாநக ராட்சி அனுமதி வழங்க வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் விம்கோ வியாபாரிகள் சங்க தலைவர்கள் காசிம், ஜெகதீ சன், கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக வட்டாட்சியர், மாநகராட்சிமண்டல அலுவ லரிடம் மனுஅளிக்கப்பட்டது.