districts

img

அம்மா பூங்கா அருகே வாரச்சந்தை அமைக்க இராமநாதபுரம் ஆட்சியர் உத்தரவு

இராமநாதபுரம், ஜூலை 12-  இராமநாதபுரம் பேருந்து நிலையம் விரி வாக்கம் பணிக்காக காலி செய்யப்பட்ட வாரச்சந்தை பட்டணம்காத்தன் அம்மா  பூங்கா அருகே அமைக்க மாவட்ட ஆட்சி யர் பா.விஷ்ணுசந்திரன்  உத்தரவிட்டார்.  இராமநாதபுரம் புதிய பேருந்து நிலை யம் அருகே புதன்கிழமை தோறும் வாரச்  சந்தை நடைபெறும் இதில், 500 க்கும்  மேற்பட்ட சிறு வியாபாரிகள் கலந்து கொண்டு உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வந்தனர்.  இந்நிலையில், புதிய பேருந்து நிலை யம் ரூ.20 கோடி மதிப்பிட்டில் விரிவாக்கம் செய்ய பணி தொடங்கி உள்ளது. இதனால் வாரச்சந்தை விற்பனையை நகராட்சி நிர்  வாகம் ரத்து செய்தது. இதனால் 50 க்கும்  மேற்பட்ட சிறு வியாபாரிகள் பாதிக்கப்படு வார்கள் என்பதால் பொதுமக்கள் தடை யின்றி வரும் இடத்தை தேர்வு செய்து வாரச்சந்தை நடத்திட நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று  வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட வாரச்சந்தை  முறை சாரா தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் இரா. முத்துவிஜயன்,கௌரவத்தலைவர் ராம மூர்த்தி, தலைவர் ராஜபாண்டியன், செயலாளர் துரைராஜ்,பொருளாளர் பிரபா கரன் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட வியா பாரிகள் செவ்வாய்கிழமை மாவட்ட ஆட்சி யர் பா.விஷ்ணு சந்திரனை நேரில் சந்தித்து  கோரிக்கை மனு அளித்தனர். இதனை தொடர்ந்து, வியாபாரிகள் குறிப்பிட்ட பட்ட ணம் காத்தன் ஊராட்சி அம்மா பூங்கா  அருகே வாரச்சந்தை அமைக்க  ஏற்பாடு கள் செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.