districts

img

தியாகராஜ நகர் ரயில்வே மேம்பாலம் திறந்த 2 மாதத்தில் பொதுமக்கள் அவதி

 திருநெல்வேலி, மே 16- தியாகராஜ நகர் ரயில்வே மேம்பாலம் கட்டிய உடனேயே ரயில்வே கேட் மூடப்பட்டதால் கடந்த இரண்டு மாதமாக பொதுமக்கள் கடும் அவதியில் உள்ளனர். இது குறித்து நெல்லை மாவட்ட நிர்வா கத்தில் விசாரித்த போது ,திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திடம்  தடையில்லா சான்றிதழ் வாங்காமல் ரயில்வே நிர்வாகம் இந்த கேட்டை மூடிவிட்டதாகவும், இது சட்ட விரோதமானது எனவும், இயல்பான போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டி ருக்கும் ஒரு பாதையில் மாவட்ட ஆட்சிய ரின்  அனுமதி இல்லாமல் மூடுவது சரியான நடைமுறை அல்ல என ரயில்வே நிர்வா கத்திற்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாக வும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திற்கு அழுத் தங்கள் கொடுத்து இந்த ரயில்வே கேட்டை மீண்டும் முழு பொதுமக்கள் பயன்பாட்டி ற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.  மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேலும் தகவல் கூறும் போது, ரயில்வே பாதையின் ஒரு புறம் இருக்கும் மக்களுக்கு இந்த மேம்பாலம் உதவிகரமாக இருப்பதாகவும் மற்றொருபுறத்தில் இருக்கும் பொது மக்களுக்கு இந்த மேம்பாலம் உதவியாக இருப்பதற்கு ரயில்வே துறையின் சார்பில் ரயில்வே தண்டவாளத்திற்கு கீழே சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளதாக வும் அந்த சுரங்கப்பாதை பணிகள் முடிவு பெறும் வரையிலும் ரயில்வே கேட்டை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என ரயில்வே துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். 30 ஆண்டுகால கோரிக்கை ,8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ரயில்வே மேம்பால பணிகள் என நீண்ட காத்திருப்பிற்கு பிறகு கிடைத்த இந்த மேம்பாலத்தினால் பொது மக்களுக்கு பயன் எதுவும் ஏற்படவில்லை என்பதே எதார்த்தம். இந்த ரயில்வே மேம்பாலத்தில் கடந்த ஒரு வாரத்தில் 8 விபத்துக்கள் நடந்து அதில் 2  பேர் உயிரிழந்தது குறிப்பிடத் தக்கது.