districts

img

சுத்தமான குடிநீர் வழங்கக் கோரி சிபிஎம் தலைமையில் மக்கள் மறியல்

அருப்புக்கோட்டை, ஜூலை 8- அருப்புக்கோட்டையில் சுத்தமான குடிநீர் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமை யில் பொது மக்கள் மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை நக ராட்சி 16 ஆவது வார்டுக்கு உட்பட்டது திருநகரம். இப்  பகுதியில் நீண்ட நாட்க ளுக்குப் பின்பு குடிநீர் வழங் கப்பட்டது. இக்குடிநீரானது, மஞ்சள் நிறத்தில் கலங்க லாக வந்தது. இதனால், பொது மக்கள் அதிர்ச்சிய டைந்தனர். இதுகுறித்து அப்  பகுதியின் சிபிஎம் நகர்மன்ற  உறுப்பினர் எஸ். கே.பால சுப்பிரமணியத்திடம் தெரி வித்தனர். பின்பு, அனைவரும் ஒன்று சேர்ந்து அருப்புக் கோட்டை-விருதுநகர் சாலையில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து  வந்த நகராட்சி ஆணையா ளர் அசோக்குமார் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்பு, சுகாதாரமான குடி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தார். இதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப் பட்டது. முன்னதாக நடைபெற்ற போராட்டத்தில் திருநகரம் கிளைச் செயலாளர் எஸ் கே.  பெரியசாமி, எஸ். கருப்ப சாமி உட்பட பலர் பங்கேற்ற னர்.