districts

img

என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளர்கள் 25 சதவீத போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி,அக். 11 என் டி பி எல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் 25 சதவீத போனஸ் வழங்கிட கோரி ஆர்ப்பாட்டம் வேண்டும்.  மத்திய அரசு அறிவித்த 2021 - 2022-ம் ஆண்டுக்கான பஞ்சபடி நிலுவையை உடனே வழங்கிட வேண்டும், என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழி லாளர்களையும் நிறுவனத் தின் நிரந்தர ஊழியர்களாக அறிவித்து சம வே லைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும், ஒப்பந்த தொழி லாளர்களுக்கு நிரந்தர ஊழி யர்களுக்கு வழங்கப்ப டுவது போல் உற்பத்தி ஊக்க தொகை வழங்க வேண்டும், ஆறு நாட்கள் தொடர்ச்சியாக பணிபுரிந்த, ஒப்பந்த  தொ ழிலாளர்களுக்கு சம்பளத்து டன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும். கொரோ னா பெருந்தொற்று காலத் தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர் கள் துரைராஜ் மற்றும் சிவ குருநாதன் ஆகிய இருவ ருக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும்,  ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரி யும் இன்ஜினியர், சூப்பர் வைசர், பிரிவினருக்கு இபிஎப்   பிடித்தம் செய்ய வேண்டும், மானியத்துடன் கூடிய கேண்டின் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. என்டிபிஎல் செயலாளர் அப்பாதுரை தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ரசல், நிர்வாகிகள் ரவி  தாகூர், மணவாளன், சிவ பெருமாள், தெர்மல் சார்பில் சுடலைமுத்து, சிபி எம் புற நகர செயலாளர் ராஜா, செல்வி, வள்ளி, துறைமுகம் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;