இராமநாதபுரம்,செப்.23- இராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 23 வெள்ளி யன்று வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் . ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில் அரசு முதன்மைச் செயலர் கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை மற்றும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் திரு.தர்மேந்திர பிரதாப் யாதவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட கணிப்பாய்வு அலு வலர் திருவாடனை ஊராட்சி ஒன்றியம், மங்களக்குடி ஊராட்சியில் வேளாண்மை துறை மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் கட்டுவதற்கான தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு விரைவாக பணிகளை மேற் கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் சிறுமனைக்கோட்டை பகுதியில் உணவு தானிய கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சித்தூர் வாடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் அடர்ந்த காடுகள் உருவாக்கும் திட்டத்திற்கான நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு இத்திட்டத்தின் மூலம் அலை யாத்தி காடுகள் பாதுகாக்கப்படுவது குறித்து கேட்ட றிந்து இத்திட்டம் சிறப்பான திட்டம் என அலுவலர்களை பாராட்டியதுடன் பொதுவாக மாவட்ட அளவில் மக்க ளுக்கு தேவையான அளவு குடிநீர் கிடைப்பதை அலுவ லர்கள் உறுதி செய்வதுடன் மேலும் குடிநீர் திட்ட பணி களுக்கு எப்பொழுதும் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என அரசு முதன்மைச் செயலர் தெரிவித்தார். இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே. பிரவீன் குமார், மாவட்ட வன அலுவலர் பகான் ஜகதீஸ் சுதாகர் மற்றும் வட்டார வயர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியா ளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.