districts

மதுரை முக்கிய செய்திகள்

பாளையில் மின்வாரிய ஊழியர் தற்கொலை வீட்டில் அழுகிய நிலையில் உடல்மீட்பு

திருநெல்வேலி, அக் .11- பாளை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (50). மின்வாரிய ஊழியர். செவ்வாய்க்கிழமை காலை இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை யறிந்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த னர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கணேசன் தூக்கில் தொங்கிய வாறு இறந்துகிடந்தார். அவர் 4 நாட்களுக்கு முன்பு இறந்துள்ளதாக தெரிகிறது. இதனால் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் இவரை சஸ்பெண்ட் செய்ததாக தெரிகிறது. இதனால் வேதனையடைந்த அவர் மதுக் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். இத னால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதில் மனமுடைந்த கணேசன்  4 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழிப்பறி: ஒருவருக்கு  1 ஆண்டு சிறை 

திருநெல்வேலி, அக் .11- விக்கிரமசிங்கபுரம் வராகபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த வா் பிச்சம்மாள் (வயது 78). இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் பிச்சம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 56  கிராம் தங்க சங்கிலியைப் பறித்து சென்றார். இதுகுறித்து பிச்சம்மாள் விக்கிரமசிங்கபுரம்  காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  இதில் வீரவநல்லூர் கோட்டைவாசல் தெருவைச் சேர்ந்த இசை செல்வன் என்ற செல்வன் (26) என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதித் துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி பல்கலைச்செல்வன் குற்றம் சாட்டப்பட்ட இசை செல்வனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2,500 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

பனை, தென்னை மரங்களை சாய்த்து ஒற்றை யானை தொடர் அட்டகாசம்

திருநெல்வேலி, அக். 11- களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், சத்திரங்காடு, தலையணை மலையடிவார பகுதியான கள்ளியாறு பகுதி களில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது.  வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை இரவில் உணவுக்காக விளைநிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் சிதம்பர புரம் சத்திரங்காடு பகுதியில் நுழைந்த ஒற்றை யானை அங்கிருந்த 3-க்கும் மேற்பட்ட பனை மரங்களை சாய்த்து அதன் குருத்துகளை தின்றுள்ளது.  மேலும் அருகில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்து தென்னை மரங்களையும் சாய்த்தது. அத்துடன் அங்கிருந்த பனம் பழங்களையும் தின்றுள்ளது. யானை நாசம் செய்த பனை மரங்கள் சிதம்பரபுரத்தை சேர்ந்த விவசாயிகள் மகேஷ், செந்தில், சந்திரசேகர் ஆகியோருக்கு சொந்தமா னது ஆகும். பல ஆண்டுகளாக வளர்த்து வந்த பனை, தென்னை மரங்களை நொடி பொழுதில் யானை சாய்த்ததை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். யானையின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் பகல் நேரங்களில் கூட விளை நிலங்களுக்கு செல்ல முடியாமல் பீதியில் உள்ளனர்.  இதுபற்றி விவசாயி செந்தில் கூறியதாவது:- யானை யின் அட்டகா சத்தால் இதுவரை 20-க்கும் மேற்பட்ட பனை மற்றும் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் விவசாயி களின் உயிருக்கும் பாது காப்பில் லாத சூழ்நிலை நிலவுகிறது. யானையை விரட்ட வனத் துறையினர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. நாசமான பனை, தென்னை மரங்களுக்கு இழப்பீடும் வழங்கப் படவில்லை. யானையினால் உயிர் சேதம் ஏற்படும் முன் ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட மாவட்ட நிர்வாகம் உடனடி யாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுபோல யானை சாய்த்த தென்னை, பனை மரங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

நெல்லையில் பரவலாக மழை-  பாளை.யில் 5 சென்டிமீட்டர் பதிவு

திருநெல்வேலி, அக் .11- நெல்லையில் கடந்த 2 நாட்களாக காலையில் வெயில் அடிக்கும் நிலையில் மதியத்திற்கு பிறகு வானில் மேகக்கூட்டங்கள் திரண்டு மழை பெய்து வருகிறது.  நெல்லையில் 2 நாட்களாக லேசான சாரல் பெய்து வந்தது. இந்நிலையில் திங்கட்கிழமை மாலை மாநகர பகுதியில் திடீரென குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. சிறிது நேரத்தில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய ஆரம்பித்தது. தச்சநல்லூர், பாளை, டவுன், கே.டி.சி. நகர், புதிய  பேருந்து  நிலைய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சந்திப்பு பகுதியில் பெய்த மழையால் ரெயில் நிலையம் திரும்பும் சாலையில் தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.அங்குள்ள சாலைகள் சேறும், சகதியுமாக காட்சியளித்தது.  பாளை வ.உ.சி.மைதானத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலும் மழைநீர் தேங்கி கிடந்தது. பள்ளி, கல்லூரி சென்று திரும்பிய மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. பாளையில் அதிகபட்சமாக 52 மில்லிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. நெல்லையில் 20.4 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 17.4 மில்லி மீட்டரும், நம்பியாறு அணை பகுதியில் 15 மில்லிமீட்ட ரும் மழை பதிவாகியது.

தூத்துக்குடியில் மனித சங்கிலி

தூத்துக்குடி, அக். 11 மதத்தின் அடிப்படையில் பகைமை யை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்க மாட் டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற் கொள்ளவும், சமூக நல்லி ணக்கத்தைப் பாதுகாக்கவும் தூத்துக்குடி மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் முன்பு செவ் வாயன்று நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.அர்ச்சுனன், மாநகர் செயலாளர் தா.ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அப்பா துரை, சண்முக ராஜ், பேச்சி முத்து மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.  சிபி ஐ சார்பில் ஞான சேகர், காங்கிரஸ் சார்பில்  ஏபிசிவி சண்முகம், முரளி தரன், விசிக சார்பில் அகமது இக்பால், திராவிடர் கழகம் சார்பில் பால்ராஜ், முனியசாமி, உள்ளிட்ட ஜனநாயக அமைப்பை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் ஷிப்பிங் நிறுவனத்தில் ரூ.5லட்சம் சிமெண்ட் மூடைகள் திருட்டு

தூத்துக்குடி, அக். 11 தூத்துக்குடியில் ஷிப்பிங் நிறுவன குடோனில் ரூ.5லட்சம் மதிப்புள்ள சிமெண்ட் மூடைகள் திருடு போய்விட்டதாக காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது :  தூத்துக்குடியில் துறைமுகம் - மதுரை பை பாஸ் ரோட்டில் உள்ள தனியார் ஷிப்பிங் கம்பெனியின் குடோனில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 968 சிமெண்ட் மூடைகள் திருட்டுப் போய்விட்டதாம். இதுதொடர் பாக அந்நிறுவனத்தின் மேலாளர் ராமராஜ் என்பவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில்  காவல் ஆய்வாளர் ராஜா ராம் பதிந்து விசாரணை நடத்தியதில், அந்த  குடோனில் பொறுப்பாளராக பணிபுரிந்த தூத்துக்குடி முஸ்லிம் தெருவை சேர்ந்த வேலுச்சாமி மகன் செல்வம் (37), முருகே சன் நகரை சேர்ந்த சேவியர் விக்டோரியா மகன் டேனியல் ராஜ் (29) ஆகிய 2பேரும் சிமெண்ட் மூடைகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவான அவர்கள் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

நெல்லையில் 9 மின்மோட்டார்கள் பறிமுதல்

திருநெல்வேலி, அக் .11- நெல்லை மாநகராட்சி பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் களை பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ண மூர்த்தி எச்சரிக்கை விடுத்திருந்தார்.  இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவை சேர்ந்த உதவி செயற்பொறியாளர் லெனின், இள நிலை பொறியாளர் ஜெயகணபதி மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது 1-வது வார்டு தச்சநல்லூர் பகுதி சத்திரம் புதுகுளத்தில் மின்மோட் டார் மூலம் குடிநீர் உறிஞ்சிய 9 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை புதிய முதல்வர் பொறுப்பேற்பு!

தூத்துக்குடி, அக். 11 தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய முதல்வராக சிவக்குமார் பொறுப்பேற்றுள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றி வந்த கலைவாணி பணியிட மாற்றம் செய் யப்பட்டார். இதைத் தொடர்ந்து திருச்சி  அரசு மருத்துவமனை மயக்க மருந்து துறை மருத்துவர் சிவக்குமார் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.  அவர்  செவ்வாயன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், “தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும், ரூ.136 கோடி மதிப்பிலான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை போன்ற திட்டங்கள் நிறை வேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்தார். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புதிய முதல்வர் சிவக்குமார் இதற்கு முன்னர், திருச்சி, கன்னி யாகுமரி, தஞ்சாவூர் அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றியுள்ளார். திருச்சி அரசு மருத்துவமனை மயக்க மருந்து துறை  தலைவராக பணியாற்றி வந்த நிலையில் அவர் பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யின புதிய முதல்வராக பொறுப்பேற்றுள் ளார்.

ரயில் சரக்கு போக்குவரத்து வருமானம் 170 கோடியாக உயர்வு

மதுரை, அக்.11- மதுரை ரயில்வே கோட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து உரம், நிலக்கரி, சுண்ணாம்புக்கல் ஆகியவை யும் வாடிப்பட்டியில் இருந்து டிராக்டர்களும் சரக்கு ரயில்  மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.  இந்த சரக்கு போக்குவரத்து வாயிலாக மதுரை கோட்டம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரை ரூ. 170 கோடி  வருமானம் ஈட்டி உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ.128.44 கோடியாக  இருந்தது.  கடந்த ஆறு மாத காலத்தில் சரக்கு போக்கு வரத்து வருமானம் 32.38 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த  ஆண்டு இதே காலத்தில் 413 சரக்கு ரயில்களில் மதுரை கோட்டத்திலிருந்து சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. தற்போது இது 614 சரக்கு ரயில்களாக உயர்ந்துள்ளது என தென்னக ரயில்வேயின் செய்திக் குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் - மதுரை இடையே சிறப்பு ரயில் 

மதுரை, அக்.11- பயணிகளின் வசதிக்காக இராமேஸ்வரம்-மதுரை இடையே கூடுதலாக  வாரத்திற்கு மும்முறை சிறப்புக்  கட்டண ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த ரயில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் முன்பதிவு இல்லாத  சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறி வித்துள்ளது. இந்த விரைவு ரயிலுக்கு இராமேஸ்வ ரத்தில் இருந்து மதுரைக்கு ரூ.70, இராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு ரூ.55, பரமக்குடியில் இருந்து மது ரைக்கு ரூ. 45, மானாமதுரையில் இருந்து மதுரை க்கு ரூ. 30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

முல்லைப் பெரியாற்றில்  மூழ்கி சிறுவன் பலி 

தேனி, அக்.11- தேனி அருகே அரண் மனைப் புதூர் முல்லை நகரைச் சேர்ந்த பிரேம் குமார் மகன் மணிமாறன் (16). கடந்த சனிக்கிழமை  விளையாடுவதாகக் கூறிவிட்டு  தனது நண் பர்களுடன் வெளியே சென்றார். அவர் வீட்டு அருகே உள்ள முல்லைப்பெரியாற்றில் குளித்துக் கொண்டி ருந்தபோது  தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். தகவ லறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்து துறையினர் சிறுவனின் உடலை சடலமாக மீட்டனர்.  பழனிசெட்டி பட்டி காவல்துறையினர் விசாரித்தனர்.

தீக்கதிர் செய்தி எதிரொலி பழுதடைந்த பள்ளிக் கட்டிடம் இடித்து அகற்றம்

தஞ்சாவூர், அக்.11 - தீக்கதிர் செய்தி எதிரொலியா கவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் நடவடிக்கை கள் காரணமாகவும் செய்யாமங்க லத்தில் பழுதடைந்த பள்ளிக் கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.  தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே, செய்யாமங்கலத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளி உள்ளது. இதன் அருகே பழுதடைந்த பள்ளிக் கட்டடம் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது.  சுற்றிலும் நான்கு பக்கமும் குடியிருப்புகள் உள்ளன. எனவே பயன்பாட்டில் இல்லாத இந்த பழைய கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் எம்.ரமேஷ் கோரிக்கை விடுத்தார்.  இந்நிலையில், இதுகுறித்து கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது. இதன் தொடர்ச்சியாக அந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  பின்னர் பொக்லைன் இயந்தி ரம் மூலம் பழுதடைந்த பள்ளிக்  கட்டிடம் பாதுகாப்பான முறை யில் இடித்த அகற்றப்பட்டது. இதனால், இப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இருந்த அச்சுறுத்தல் நீங்கியது.  இதுகுறித்து செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

;