தென்காசி, செப். 12 தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் பொதுமக்களிட மிருந்து கோரிக்கை மனுக்க ளைப் பெற்றுக் கொண்டார். இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, அடிப்படை வசதி கள் ஏற்படுத்தி தரக் கோரு தல், பட்டாமாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 284 மனுக்கள் பெறப்பட்டது. இந்தக்கூட்டத்தில் பெறப் பட்டமனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ள தா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவ டிக்கை மேற்கொண்டு மனு தாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்மந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவ லர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாற்றுத்திற னாளிகள் நலத்துறை சார்பில் இரண்டுமுதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திற னாளிகளுக்கு ரூ.1இலட் சத்து 60 ஆயிரம் மதிப்பி லான, மாற்றுத்திறனாளி களுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர்(பொ) முத்துமாதவன் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.