தூத்துக்குடி, டிச.2- தூத்துக்குடியில் குடிநீர்த் திட்டம், பாதா ளச் சாக்கடை, கனமழை போன்ற கார ணங்களால் சாலைகள் சிதைந்து சின்னா பின்னமாகி உள்ளன. அதனால் தினமும் ஏற்படும் விபத்துகளில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். துறைமுகம் நகரமான தூத்துக்குடியில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நிறு வனங்களும், தனியார் நிறுவனங்களும் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாநகர் வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 1986 ஆம் ஆண்டு தூத் துக்குடி தனி மாவட்டமாக உருவான நிலை யில் 2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநக ராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதோடு 2018 ஆம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்பட்டது. மாவட்டம் உருவானதில் இருந்து கடந்த 35 ஆண்டுகளில் தூத்துக்குடியில் மக்கள் தொகை பன்மடங்கு அதிகரித்துள்ள போதும் தேவையான அடிப்படை வசதிகள் கூட இதுவரை முழுமையாக நிறைவேற்றப் படவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் மாநக ரில் பாளை ரோடு, வி.இ.ரோடு, அண்ணா நகர் ரோடு போன்ற குறிப்பிட்ட சாலைகள் மட்டுமே மீண்டும் மீண்டும் அமைக்கப்பட்ட போதும் தெருக்களில் சாலை வசதிகளை மேம்படுத்த எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. அதிலும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட மழைவெள்ளத்தால் சேதமடைந்த சாலை கள், தெருக்கள் இன்று வரை போடப்பட வில்லை. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகரை அழகுப்படுத்தும் பணிக்கும் பூங்காக்களை அமைக்கும் பணிக்கும் கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது.
ஆனால், சாலை வசதிக்கு எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. கடந்த சில மாதங் களாக தூத்துக்குடியில் பல்வேறு சாலை கள் கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பதற்காகவும், பல்வேறு தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்காகவும், மின்வாரிய பணிக்காகவும் தோண்டப் படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த மழையாலும் சாலை குண்டும், குழியுமாக மாறிவிட்டது. காட்சியளிக்கிறது. தற்போது அண்ணாநகர் மெயின்ரோடு, குறிஞ்சிநகர் மெயின்ரோடு, பிரையண்ட் நகர், மில் லர்புரம் மெயின்ரோடு, ஜார்ஜ்ரோடு, பீங்கான் ஆபீஸ் சந்திப்பு, டூவிபுரம், காம ராஜர் சாலை உள்ளிட்ட பல்வேறு பிரதான சாலைகளில் தோண்டப்பட்ட குழிகள் மூடப் படாமலும் அதனால் சேதமடைந்த சாலை கள் மற்றும் மழையால் சேதமடைந்த சாலை கள் சரிசெய்யப்படாமலும் குண்டும்குழி யுமாக கிடப்பதால் வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதுதவிர புதிதாக கழிவுநீர் மற்றும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் தரமற்ற முறையில், தகுந்த திட்டமிடுதல் இல்லா மல் நடந்து வருவதால் தற்போது பல இடங் களில் தேங்கி நிற்கும் தண்ணீரால் துர்நாற்றம் வீசுகிறது. பல இடங்களில் பாதியோடு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. வடிகால் அமைக்க குழிகள் தோண்டும்போது தண்ணீரோடு கான்கிரீட் போடப்படுவதால் அது தரமில்லாமல் உள்ளது. இதை அதி காரிகளும் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவற்றை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.