districts

img

கண்மாயை தூர்வாரக்கோரி மக்கள் முற்றுகை

கடமலைக்குண்டு, ஆக.5- தேனி மாவட்டம், வருசநாடு அருகே 64 ஏக்கர் பரப்பளவில் பஞ்சந்தாங்கி கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரக்கோரி வருசநாடு பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளிக்கிழமை காலையில் மயிலாடும்பாறையில் உள்ள கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  அப்போது போலீசார் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கலைந்து சென்றனர்.

;