சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் மாதர் சங்கம் கோரிக்கை மனு
மதுரை, ஜூலை 7- மதுரை பாரதி நகரில் பகுதியில் பொதுமக்களு க்கு இடையூறாக செயல் படும் அரசு மதுபானக் கடை யை மதுரை மாவட்டம் நிர்வா கம் அகற்ற வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப் பினர் சு. வெங்கடேசனிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோரிக் கை மனு அளித்தனர். மதுரை மாநகராட்சி 22 ஆவது வார்டில் தத்தனேரி மெயின் ரோடு. பாரதி நகர் பகுதியில் கடந்த 18 மாதங்க ளுக்கும் மேலாக அரசு மது பான விற்பனை கடை( 5140) பார் வசதியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் மது அருந்துபவர்களினால் அருகாமையில் வசித்து வரும் பொதுமக்களுக்கு தொடர்ந்து இடையூறும், அச்சமும் ஏற்பட்டு வரு கிறது. குடித்து விட்டு நபர்கள் குடியிருப்பு பகுதியில் உட்காருவதும், இயற்கை உபாதைகளை கழிப்பதும். வாகனங்களை வீட்டின் முன்னால் நிறுத்திவிட்டு செல்வதும் தினசரி நடை பெற்று வருகிறது.
குடி யிருப்பு பகுதியில் இப்படி செய்யாதீர்கள் என்று குடி மகன்களிடம் மக்கள் கூறி னால், பெரும் வாக்குவாதத் தில் ஈடுபடுகிறார்கள். காலை 6 மணி முதல் மது விற்பனை மேற்கண்ட கடையின் முன்பாக பல்வேறு குற்றச் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த கடையில் அரசு அனுமதி அளித்த நேரத்திற்கு முன்னதாக காலை 6 மணி முதல் மது விற்பனை நடைபெற்று வருகிறது. அரசு விடுமுறை நாட்களிலும் தங்கு தடை யின்றி விற்பனை நடை பெறுகிறது. டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்கான தூர நிர்ணய விதிகள் முறை யாக பின்பற்றப்பட வேண்டு மென தலைமை நீதிமன்ற வழிகாட்டுதல்கள் இருந் தும். இங்குள்ள கடை மற்றும் பார் குடியிருப்புக்கு மிக அருகாமையில் உள்ளது. அதாவது கதவு எண் 142 இல் குடியிருப்பு. 143 இல் மதுபானக்கடை, 145 இல் குடியிருப்பு என உள்ளது. எனவே, மக்களுக்கு இடையூறாக இருக்கும் மேற் கண்ட டாஸ்மாக் கடை (எண் 5140) மற்றும் மதுபார்-ஐ மாற்றிட உரிய நடவடிக் கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தி யுள்ளனர். மத்திய சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட மாநகராட்சி வார்டுகளில் உள்ள மக்க ளுக்காக வியாழனன்று பொதுமக்கள் குறை தீர் மற்றும் கோரிக்கை மனு பெறும் முகாம் நடைபெற் றது. இந்த முகாமில் ஜன நாயக மாதர் சங்க மதுரை மாநகர் மாவட்டத் தலை வர் ஆர்.லதா, மாவட்டச் செயலாளர் -மாமன்ற உறுப் பினர் வை.ஜென்னியம்மாள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் மனுவை அளித்தார்.