சிவகங்கை,செப்.20- நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம் அரண்மனை வாயிலில் தர்ணா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வடிவேலு தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்ட செயலாளர் செல்லமுத்து கோரிக்கைகளைவிளக்கி பேசினார். நிர்வாகிகள் இராமகிருஷ்ணன், ஜீவானந்தம், கண்ணுச்சாமி ஆகியோர் பேசி னர். தோழமைச்சங்க நிர்வாகிகள் கோவிந்த ராஜ், சங்கரநாராயணன்,முத்துசாமி ஆகி யோர் ஆதரித்துப் பேசினர்.