districts

img

ஆரன்முளாவில் வள்ளங்களி: திருச்சூரில் புலிக்களி உற்சாகப் பெருக்குடன் நிறைவடைந்தது ஓணம்

திருவனந்தபுரம், செப்.12- இரண்டு ஆண்டுகள் கோவிட் பொது முடக்கம், அதற்கு முன்பு 2019 இல் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் தடைபட்ட ஓணம் பண்டிகை இம்முறை கேரளத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் நிறைவைக் குறிக்கும் வகையில் உலகப் புகழ்பெற்ற ஆரன்முளா வள்ளங்களியும் (படகுப்போட்டி) புகழ்பெற்ற திருச்சூர் புலிக்களியும் (புலியாட்டம்) ஞாயிறன்று நடைபெற்றது. பத்தனம் திட்டா மாவட்டம் பம்பை ஆற்றில் ஆரன்முளாவில்  உத்திரட்டாதி நீர் திருவிழாவில் மல்லப்புழாச்சேரி மற்றும் எடப்பாவூர் வள்ளங்களி அணிகள் வெற்றி பெற்றன. தண்ணீர் திருவிழாவை சுவாமி நிர்வினாநந்த மகராஜ் துவக்கி வைத்தார். படகு போட்டியை நாகலாந்து முன்னாள் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன் கொடிய சைத்து துவக்கி வைத்தார். திருச்சூரில் நடந்த புலக்களியில் ஐந்து குழுக்களைச் சேர்ந்த இருநூற்று ஐம்பது புலிகள் பங்கேற்றன. புலி ஆட்டத்துடன் நடந்த பிரமிக்க வைக்கும் காட்சிகளை பல்லாயிரக்கணக்கான மக்கள் ரசித்தனர்.

;