districts

img

நிலக்கோட்டை பேரூராட்சிக்கூட்டம்

சின்னாளப்பட்டி,டிச.28- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சி யில் நடைபெற்ற  மாதாந்திர கவுன்சிலர் கூட்டத்திற்கு பேரூ ராட்சி மன்ற தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலை மை வகித்தார்,செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்  தார். துணைத் தலைவர் எஸ்பி.முருகேசன் வரவேற்றார். இக்கூட்டத்தில் சமீபகாலமாக அதிகரித்து வரும் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். மழைகாலம் என்ப தால் மழைநீரால் ஏற்படும் சாக்கடை கால்வாய்களை உட னடியாக சரிசெய்ய வேண்டும். அடிப்படை பணி களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கவுன்  சிலர்கள் கோரிக்கை வைத்தனர். கவுன்சிலர் ஜோசப் கோவில்பிள்ளை பேசுகையில், நிலக்கோட்டை பேரூ ராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி,வைகை கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியதை  ஏற்று பரிந்துரை செய்த ஊரக வளர்ச்சித்  துறை அமைச்சர் இ.பெரியசாமிக்கும் ரூ.37.5 இலட்சம் ஒதுக்கிய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேருவுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற கேட்டுக்கொண்டார். இதையடுத்து நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுகாதார ஆய்வாளர் சடகோபி நன்றி கூறினார்.