பெர்ன், டிச.1- பொது இடங்களுக்கு வர தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்று பல்வேறு நாடுகள் விதிகளைக் கொண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில், அதை மக்களின் அனுமதியோடு கொண்டு வரும் புதுமையான முயற்சியை சுவிட்சர்லாந்து கையாண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவிவரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இந்தக் கட்டுப்பாடுகள் தங்கள் வாழ்க்கையை முடக்கி விடுவதாக பல ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடி வரு கிறார்கள். தடுப்பூசி போட்டிருந்தால் தான் பொது இடங்களுக்கு வரலாம் என்று அரசுகளின் ஆணைகளை திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கள் கோரி வருகிறார்கள். இந்த நிலை மையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த பல வலதுசாரிக் கட்சிகள் முயன்று வருகின்றன. சுவிட்சர்லாந்திலும் எதிர்ப்புகள் கிளம்பின. இதற்கு தீர்வு காணும் வகையில் வாக்கெடுப்பு நடத்த அந்நாட்டு அரசு முடிவெடுத்தது.
பொது இடங்களுக்கு வரும்போது “கோவிட் பாஸ்போர்டை”க் காட்ட வேண்டும் என்ற அரசின் ஆணையை நடை முறைப்படுத்தலாமா அல்லது வேண் டாமா என்ற கேள்வியை முன்வைத்து இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்கும் முதல் அரசாக சுவிட்சர் லாந்து ஆகியுள்ளது. நவம்பர் 28 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. 62 சதவிகித மக்கள் “கோவிட் பாஸ்போர்ட்” தேவை என்றும், அதை ஏற்றுக் கொள்வதா கவும் வாக்களித்திருக்கிறார்கள். இதனால் மக்கள் ஆதரவுடன் இதை நடைமுறைப்படுத்தப் போகிறார்கள். திரையரங்குகள், தேவாலயங்கள், கேளிக்கை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பங்கேற்க விருப்பவர்களுக்கு இது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாத வர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகி றார்கள் என்று ஒரு தரப்பு மக்கள் சொல்வதால், இந்த ஜனநாயகப் பூர்வமான வாக்கெடுப்பை நடத்தி யிருக்கிறார்கள். வேலைக்குச் செல்வதற்கோ அல்லது பொதுப் பேருந்துகளில் பயணம் செய்வ தற்கோ இந்த கோவிட் பாஸ்போர்ட் அவசியமில்லை என்றும் சுவிட்சர்லாந்து அரசு அறிவித்தி ருக்கிறது.