திருநெல்வேலி, டிச. 8- நெல்லை மாநகரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடை பெற்று வருகிறது. அதில் முக்கிய பணியாக பாளையங்கோட்டை பேருந்து நிலை யத்தில் சில மாற்றங்கள் செய்து புதிய பொலிவுடன் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா புதன்கிழமை காலை நடைபெற்றது. பொலிவூட்டபட்ட புதிய பேருந்து நிலை யத்தை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்,புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு குத்துவிளக்கு ஏற்றினார். இந்த நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் .,நகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன், நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் செந்தாமரைக் கண்ணன், துணை ஆணையர் சுரேஷ்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மாவட்ட அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.