districts

img

தேசிய ஊட்டச்சத்து மாத விழா

நாகர்கோவில், அக். 1- ஊட்டச்சத்து குறித்த போஷன் மா நிறைவு விழாவானது தக்கலை வட்டாரம் முளகுமூட்டிலுள்ள குழந்தை இயேசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு முளகுமூடு பேருராட்சி தலைவர் ஜெனிஷா தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட அலுவலர் வ.ஜெயந்தி, மாவட்ட தாய் சேய் நல  அலுவலர் பியூலா, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில் குமார், பங்கேற்றனர். மாணவியர்களுக்கு கட்டுரைப்போட்டி, கோலப்போட்டி மற்றும் அடுப்பில்லா சமையல் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. ஊட்டச்சத்து உறுதி மொழி எடுக்கப்பட்டது. குழித்துறை முஞ்சிறை வட்டாரம் கொல்லங்கோடு  மார் கிரிஸ்டோத்தம் பி.எட் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது. விழாவில்  குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி  தலைமை வகித்தார், அருட்தந்தை பெர்னார்ட், வழக்கறிஞர் முத்துமலர், ஊட்டச்சத்து நிபுணர் ஜாஸ்மின் நிஷா ஆகியோர் பேசினர். பயனாளிகளுக்கு கொண்டை கடலை , கேழ்வரகு லட்டு, கம்பு லட்டு, தினை லட்டு, கொள்ளு லட்டு, சோளம் பிட்டு, சாமை பொங்கல், கேழ்வரகு பிட்டு, வரகு பாயாசம் மற்றும் கேழ்வரகு பாயாசம் வழங்கப்பட்டது.  ஊட்டச்சத்து, இரத்த சோகை, மனித உரிமை சட்ட திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மேலும் வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து கோலம் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.