districts

img

நூலகர் பிரமநாயகத்திற்கு தேசிய விருது

தென்காசி, செப் .27 சென்னையில் செயல் பட்டு வரும் SALIS (SOCIETY FOR ADVANCEMENT OF LIBRARY AND INFORMA TION  SCIENCE) சமூக முன் னேற்றத்திற்கான நூலக தகவல் அறிவியல் அமைப் பானது ஆண்டுதோறும் மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் சிறப்பாக சேவை யுடன் செயலாற்றி வரும் நூலகர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வரு கிறது. 2020ம் ஆண்டிற்கான டாக்டர்.வெங்கிடுசாமி தேசிய நல்நூலகர் விரு திற்கு, தென்காசி வ.உ.சி வட் டார நூலக நூலகர் சூ.பிரம நாயகத்தை  சாலிஸ் நிறு வனர் டாக்டர் ஹரிகரன் தலை மையிலான தேர்வுக்குழு தேர்ந்தெடுத்து உள்ளது. இவ்விருது 14.10.2022 அன்று திருசெங்கோட்டில் கே.எஸ்.ஆர்  பொறியியல் கல்லூரியில் நடைபெறும் தேசிய மாநாட் டில் வழங்கப்பட உள்ளது. கடந்த 31ஆண்டுகள் நூலகப் பணியில் தமிழக அரசின் மாநில நல்நூலகர் விருதினை 14-11-1994 அன்றும், 2002ம் ஆண்டு நல்நூலகர் விருதினை 24.11.2002 அன்றும் பெற் றுள்ள சூ.பிரமநாயகம், தொடர்ந்து ஆற்றிவரும் நூலக வளர்ச்சிப்பணிகள், போட்டிதேர்வு மாணவர்க ளுக்கு இலவச பயிற்சிதேர்வு, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள், புத்தக கண்காட்சி, நூலகவார விழாக்கள் உள்ளிட்டநூலக வளர்ச்சிப் பணிகளுக்கு அங்கீகாரம் வழங்கிடும் வகை யில் தேர்வு செய்துள்ளனர்.