districts

img

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் அமைச்சர் வழங்கினார்

விருதுநகர், செப்.25-   விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில், வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார். அருப்புக்கோட்டை வட்டம், கஞ்சநாயக்கன்பட்டி கிரா மத்தைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் காவல் படைவீரர் ஆர்.ஆதி மூலம்  என்பவர் பணியிலிருக்கும் போது காலமானார். இதைய டுத்து, அவரது மகன்  அருண் என்பவருக்கு கருணை அடிப்ப டையில் இளநிலை வருவாய் உதவியாளர் பதவிக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.  வெம்பக்கோட்டை வட்டம், ஏழாயிரம் பண்ணை, இ. ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த  படைவீரர்  கே.பொன் குமார் என்பவர் பணியிலிருக்கும் போது  காலமானார். அதைத் தொடர்ந்து அவரது மனைவி என்.சிவரஞ்சனி என்பவருக்கு  கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான பணிநியமன ஆணை வழங்கினார்.  விருதுநகர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி யில் சமையலராகப் பணிபுரிந்த  பி.கமலம் என்பவர் பணியிலி ருக்கும் போது  காலமானார். எனவே,  அவரின் மகன்  பா. முத்துக்குமார் தோட்டக்காரர் பணிக்கான பணிநியமன ஆணையை  அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தி ரன்  வழங்கினார். இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. ரவிக்குமார், துணை இயக்குநர் (புலிகள் காப்பகம்) திலீப்  குமார்,  மாவட்ட வன அலுவலர்  ராஜ்குமார்,  ஆட்சியரின்  நேர்முக உதவியாளர்   காளிமுத்து, அலுவலக மேலாளர் பர மானந்த ராஜா உட்பட பலர் இருந்தனர்.

;