தூத்துக்குடி, டிச.7 தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக் கலைத் துறையின் மானிய விலையில் மாடித்தோட்ட தழைகள், காய்கறி விதைத் தழைகள், ஊட்டச் சத்து தழைகள் வழங்கும் திட்டத் தினை அமைச்சர் பெ.கீதாஜீவன் துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் பயனாளிகளுக்கு மானிய விலையில் மாடித்தோட்ட தழைகள், காய்கறி விதைத் தழைகள், ஊட்டச்சத்து தழைகள் ஆகியவற்றை வழங்கும் திட்டத்தினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், உடனிருந்தார். விழாவில் அமைச்சர் பெ.கீதா ஜீவன் பேசியதாவது: வேளாண்மை -உழவர் நலத்துறையின் தோட்டக் கலை மலைப்பயிர்கள் துறை சார்பாக ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபி விருத்தி திட்டத்தின் கீழ் செவ்வா யன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் முதலமைச்ச ரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்ட திட்டத்தின் கீழ், 225 ரூபாய் மானிய விலையில் 6 வகையான காய்கறிக ளை வீட்டு மாடித் தோட்டங்களில் வளர்த்து பயன்பெறும் விதமாக மாடித் தோட்ட தழைகளையும் ஊரகப் பகுதிகளில் காய்கறித் தோட்டம் அமைப்பதை ஊக்குவிப்பதற்காக 15 ரூபாய்க்கு 12 வகை காய்கறி விதைத் தழைகளையும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டசத்து தழைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 25 ரூபாய்க்கு 8 செடிகள் அடங்கிய தொகுப்பினை எளிய மக்களும் பயன் பெறும் வகையில் 75 சதவிகித மானிய விலையில் வழங்கி தொடங்கி வைத்தார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் நமது மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நமது மாவட்டத்தில் 4550 பயனாளிகள் பயன்பெறும் வகை யில் 75 சதவீத மானிய விலையில் மாடித் தோட்டத் தழைகள், காய்கறி விதைத்தழைகள் மற்றும் ஊட்டச்சத்து தழைகள் ஆகிய திட்டங்கள் பதி னொன்று இலட்சம் மதிப்பில் செயல் படுத்தப்பட உள்ளது. மாடித் தோட்ட தழைகள் தொகுப்பில் காய்கறி வளர்ப்பு பைகள், தென்னை நார் கழிவு, காய்கறி விதைகள் மற்றும் உயிர் உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. மேலும் 12 வகை காய்கறிகளை நமது வீட்டிலேயே உற்பத்தி செய்து வீட்டின் உணவு தேவைக்கு நமக்கு நாமே தன்னிறைவு பெறும் வண்ணம் காய்கறி விதைத் தழைகள் வழங்கப்பட உள்ளன. கொரோனா போன்ற பெருந் தொற்று நோய்கள் மற்றும் இதர நோய்கள் நம்மை அண்டாதவாறு நோய் எதிர்ப்பு சக்தியை மேம் படுத்தவும், ஊட்டச்சத்தினை அதிக ரிக்கவும் திப்பிலி, கற்பூரவள்ளி, கற்றாழை போன்றவை அடங்கிய 8 வகை செடிகளின் தொகுப்பும் வழங் கப்பட உள்ளன. இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கு பொது மக்கள் https://tnhorticulture.tn.gov.in/kit/ என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் துணை இயக்குநர் தோட்டக்கலைத் துறை (பொறுப்பு) சுந்தர்ராஜன், உதவி இயக் குநர்கள் சிவக்குமார், ஜெபத்துரை (பொறுப்பு) மற்றும் விவசாயிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.