districts

img

செட்டியபட்டி கிராம சபையில் அமைச்சர் இ.பெரியசாமி பங்கேற்பு

சின்னாளபட்டி, அக்.2- மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு  திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர்  ஒன்றியம் செட்டியபட்டி ஊராட்சியில் நடை பெற்ற கிராம சபை கூட்டத்தில் கூட்டுற வுத்துறை அமைச்சர்  இ.பெரியசாமி பங்  கேற்றார். இதில் அமைச்சர் பேசுகையில், இப்பகு தியில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும்  இயக்கப்படும். கால்நடை மருத்துவமனை, சமுதாயக்கூடம் அமைக்கப்படும். இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  செட்டியபட்டி பிரிவில் பேரிகார்ட் இருப்பதால் சின்னாளபட்டி மற்றும் கலிக்கம்பட்டி  சுற்றி    ஊருக்கு செல்வது சிரம மாக இருக்கிறது என்று மக்கள் கூறினர்.  அமைச்சர் உடனடியாக எந்த பேருந்து இங்கு வந்து கொண்டிருந்தது அது சம்பந்  தப்பட்ட அதிகாரியிடம் பேசுங்கள் என்று  ஆட்சியரிடம் அறிவுறுத்தினார்.  இந்த இடத்தில் ஒரு ஹைமாஸ் லைட்  போட வேண்டும். ஏன் போடாமல் இருக்கி றீர்கள் என்று அதிகாரியிடம் கேட்டார். செவி லியர்கள் வருவதில்லை என்று பொது மக்கள் புகார் கூறினர்.  உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்  ஏன் வரு வதில்லை என்று விசாரித்தார்.  இதில் ஒன்றிய செயலாளர் முருகேசன், ஒன்றிய சேர்மன் மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, ஏழுமலையான், ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, ஊராட்சி செயலாளர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பஞ்  சம்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு துணைத் தலைவர் அருளா னந்த், ஊராட்சி செயலர் பாலாஜி மற்றும்  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்  டனர். வக்கம்பட்டியில் கிராம சபைக்கு தலை வர் பிரிட்டோ, ஊராட்சி செயலர்  தமிழ்ச்செல்வன் உட்பட துறை  அதிகாரி கள் கலந்து கொண்டனர். வீரக்கல்லில்  கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் ராஜேஸ்வரி தங்கவேல், துணைத் தலை வர் யூஜின் ராஜா ,ஊராட்சி செயலர் முத்துச்சாமி உட்பட பலர் கலந்து கொண்ட னர். முன்னிலைக்கோட்டையில்  கிராம சபைக் கூட்டத்தில் தலைவர் அந்தோணி யம்மாள் ஊராட்சி செயலர் சபின்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;