districts

மதுரை முக்கிய செய்திகள்

சாரல் மழையால் மேகமலை அருவியில் நீர்வரத்து

கடமலைக்குண்டு,  ஜுலை 5- தேனி மாவட்டம் கோம்  பைத்தொழு அருகே மேக மலை அருவி அமைந்துள் ளது. போதிய அளவு மழை  இல்லாத காரணத்தால் கடந்த 2 மாதங்களாக அருவி வறண்ட நிலையில் காணப் பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மேக மலை வனப்பகுதியில் தொட ர்ந்து சாரல் மழை பெய்து  வருகிறது. அதன் காரணமாக புதன்கிழமை காலை மேக மலை அருவியில் நீர்வரத்து ஏற்பட்டது. தொடர்ந்து சாரல்  மழை பெய்து வருவதால் நீர்  வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  இதற்கிடையே நீர்வரத்து  ஏற்பட்டுள்ள காரணத்தால் வரும் விடுமுறை நாட்களில்  அருவிக்கு சுற்றுலா பயணி கள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேகமலை வனப்பகுதியில் கனமழை பெய்தால் அருவி யில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே  சுற்றுலாப் பயணிகள் வெள்ள அபாயத்தில் சிக்கிக்கொள்வதை தவிர்க்க மேகமலை வனத் துறையினர் தொடர்ந்து அரு வியில் பாதுகாப்பு பணி களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை

இராமேஸ்வரம், ஜூலை 5- இராமநாதபுரம் மாவட்  டம், மண்டபம் வடக்குதுறை முகத்தில் இருந்து கடந்த  மாதம் 21 ஆம் தேதி 400க்கும் மேற்பட்ட விசைப்படகு களில் 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.  கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த மண்டபத்தை சேர்ந்த ஒரு  படகு மற்றும் சந்தியா, ஷிப்  ரான், தேவா, நடராஜன், நாக ராஜன் ஆகிய 5 மீனவர்களை சிறைப்பிடித்தனர். இதே  போன்று புதுக்கோட்டை யைச் சேர்ந்து மூன்று விசைப்  படகுகள் மற்றும் 17 மீன வர்கள் சிறைபிடிக்கப்பட்ட னர். மொத்தமான நான்கு  விசைப்படகுகள் 22 மீனவர்  களை கைது செய்யப்பட்ட னர். இதில், எல்லை தாண்டி  மீன்பிடித்ததாக வழக்கு  பதிவு செய்து ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜூலை 5 ஆம் வரை  சிறையில் அடைக்க நீதிபதி  உத்தரவிட்டார். இதனைய டுத்த, 22 மீனவர்கள் யாழ்ப்  பாணம் சிறையில் அடைக் கப்பட்டனர். சிறையில் உள்ள மீனவர்களை சந் தித்து இந்திய துணை தூத ரக அதிகாரிகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.  இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை மீண்டும் ஊர்க்  காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதி பதி விசாரணைக்கு பின் இனி  எல்லை தாண்டி மீன்பிடிக்க வரமாட்டோம் என மீனவர் கள் தெரிவித்தனர். இதனை யடுத்து, 22 மீனவர்களை விடு தலை செய்தார். மேலும் இந்த மீனவர்கள் 5 ஆண்டு களில் மீண்டும் சிறைபிடிக் கப்பட்டால் விடுதலை செய்ய மாட்டோம் என எச்ச ரித்தார். நான்கு படகுகள் குறித்து மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் படகு களை விடுவிக்க மறுத்து விட்டார்.  இதனைத்தொடர்ந்த, விடுதலை செய்யப்பட்ட 22 மீனவர்கள் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணை தூத ரக அதிகாரிகளிடம் ஒப்ப டைக்கப்பட்டனர். இந்த மீன வர்கள் ஓரிரு நாட்களில் நாடு  திரும்புவார்கள் என அதி காரிகள் தெரிவித்தனர்.

இன்று மதுரை மத்திய தொகுதியில்  சு.வெங்கடேசன் எம்.பி.,மக்கள் சந்திப்பு

மதுரை, ஜூலை 5-  மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநக ராட்சி வார்டுகளில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமையில் மக்கள் சந்திப்பு - கோரிக்கை  மனுக்கள் பெறும் முகாம் ஜூலை 6 அன்று நடைபெறுகிறது. மேல ஆவணி மூல வீதியில் உள்ள லீலா தேவி திருமண  மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் 50,51,52, 54,55, 75,76,77 ஆகிய வார்டுகளுக்கும் பிற்பகல் 2.30 மணிக்கு ஏ. ஏ. ரோடு சமூகப்பணி மன்றத்தில் 21,22,56,57,58,59,60,61 ஆகிய  வார்டுகளுக்கும் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் பட்டா பிரச்சனை, மின்சார வசதி, குடிநீர் பிரச்சனை, சாலை  வசதி, தெருவிளக்கு, மாற்றுத்திறனாளி, பேருந்து வசதி, பாதாளசாக்கடை, வீட்டுவரி சம்பந்தமாக முதியோர் - விதவை - கணவரால் கைவிடப்பட்டோருக்கான உதவித் தொகை உள்ளிட்டவை குறித்து கோரிக்கை மனு அளிக்கலாம். இதில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாநக ராட்சி மேயர், மாநகராட்சி ஆணையாளர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

;