பென்னாகரம், செப்.9- பென்னாகரம் அருகே விவசாய குடும்பத்தை தாக்கிய வனத்துறை அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டுமென பென்னாகரம் தாலுகா அலுவ லகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தருமபுரி மாவட்டம், பத்ரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கூழிக்காடு பகுதி யைச் சேர்ந்தவர் குழந்தைசாமி மகன் அர்த்தனாரி (40) விவசாயி. கடந்த ஆக.30 ஆம் தேதியன்று இரவு தனிப் படை வன சரகர் ஆலயமணி தலைமை யிலான வனத்துறையினர் அர்த்தனாரி வீட்டிற்குச் சென்று நாட்டுத் துப்பாக்கி எங்கே வைத்துள்ளாய் என கேட்டுள்ள னர். தெரியாது எனக் கூறியபோது, வனத்துறையினர் அர்த்தனாரியை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், இதனைக்கண்டு பதறியடித்து தடுக்க வந்த அர்த்தனாரி மனைவி சுதா மற் றும் குழந்தைகளையும் வனத்துறையி னர் தாக்கினர். பின்னர் வனத்துறை யினர் அர்த்தனாரியை சின்னம்பள்ளி யில் உள்ள வனத்துறை அலுவலகத் திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ள னர். மேலும், வனவிலங்குகளை வேட் டையாடியதாக வழக்கு பதிந்து ரூ.15 ஆயிரத்தை அபராதமாக வசூலித் துள்ளனர்.
இந்நிலையில், வனத்துறை யினர் தாக்கியதில் காயமடைந்த அர்த்த னாரி மற்றும் அவரது மனைவி சுதா ஆகி யோர் தருமபுரி அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் ஆறு நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ள னர். இதுதொடர்பாக அர்த்தனாரி மற் றும் மனைவி மீது தாக்குதல் நடத்தி பொய் வழக்கு பதிந்த வனத்துறை யினரை கண்டித்தும், தாக்குதல் நடத் திய வனத்துறையினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெள் ளியன்று பென்னாகரம் தாலுகா அலு வலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய செய லாளர்கள் முருகன், சக்திவேல், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஏ.குமார் கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிசுபாலன், சின்னசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் குமார், மாவட்ட குழு உறுப் பினர்கள் அன்பு, செல்லன், சுதா பாரதி, சிவா, பென்னாகரம் மற்றும் ஏரியூர் ஒன் றியத்தை சேர்ந்த விவசாயிகள், மலை வாழ் மக்கள் நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பென்னாகரம் வட்டாட்சியர் அசோக் குமாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.