தூத்துக்குடி, டிச.9- தூத்துக்குடியில் சட்ட விரோ தமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.14 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகளை வனத்துறையினர் கைப்பற்றி, மூவரை கைது செய்தனர். தூத்துக்குடி சிலுவைப்பட்டி கடற்கரை பகுதியில் வியாழ னன்று அதிகாலை 1.30 மணியள வில் மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய பூங்காவின் தூத்துக்குடி வனச்சரகர் ரகு வரன் தலைமையில் வனவர் மதன்குமார், அருண்குமார் வனக்காப்பாளர் மணிகண்டன், பாலாஜி, வேட்டைதடுப்பு காவ லர்களுடன் ரோந்து பணி மேற் கொண்டபோது கோமஸ்புரம் பகுதியில் உள்ள தனியார் நிறு வனத்தில் சந்தேகத்தின் பேரில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் அங்கு சட்ட விரோதமாக சுமார் 750 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைத்தி ருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சுமார் ரூ.14 லட்சம் மதிப்புள்ள 750 கிலோ கடல் அட்டைகளை வனத்துறை யினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம், மேலவயல் பகுதி யைச் சேர்ந்த செந்தில்குமார் (48), தொண்டியைச் சேர்ந்த சாதிக் பாட்சா (37), தூத்துக்குடி தாய் நகரைச் சேர்ந்த நந்தகுமார் (21) ஆகிய 3பேர் கைது செய்யப் பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மேலும் ஆம்னி கார், கேஸ் அடுப்புகள், சிலிண்டர் கள், மொபைல் போன்கள் கைப் பற்றப்பட்டுள்ளன.