districts

img

மதுரை பரவை பேரூராட்சி வார்டுகளில் சு.வெங்கடேசன் எம்.பி., மக்கள் சந்திப்பு

மதுரை, ஜூலை 4- மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு  உட்பட்ட மேற்கு ஊராட்சி ஒன்றியம் பரவை பேரூராட்சி 1 முதல் 15 வார்டு களில் சு.வெங்கடேசன் எம்.பி., ஜூலை 4 அன்று மக்கள் சந்திப்பு நடத்தி, கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்றார். குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தார். இந்த முகாம் மதுரை பரவை மெயின் சாலையில் உள்ள ஏஎஸ்ஆர் .மஹாலில் நடை பெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை, மூன்று சக்கர வாகனம்,  ஊன்றுகோல், செயற்கை கை  உள்ளிட்டவைகள் கேட்டு 8 மனுக்கள்  நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசனிடம் அளித்தனர். அதில் உடனடி யாக தீர்க்கக்கூடிய கோரிக்கைகளை அதிகாரிகளிடம் பேசி தீர்த்து வைத்தார். பரவை பேரூராட்சி சத்திய மூர்த்தி  நகர் பகுதியினை சேர்ந்தவர் ராஜா மணி மகள் ஜீவா என்ற மாற்றுத்திற னாளி(வாய் பேச முடியாத பெண்).இவர் எம்.காம் படித்து முடித்துள்ளார். தனக்கு மாற்றுத்திறனாளி உதவித்  தொகை வேண்டியும், வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரக்கோரியும் மனு  அளித்தார். உடனடியாக மாற்றுத்திற னாளி நலத் துறை அதிகாரிகளிடம் பேசி, அந்த பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கி உதவினார். அந்த பெண் கண்ணீர் மல்க எம்.பிக்கு நன்றி  தெரிவித்தார். 

10 நபர்களுக்கு உடனடியாக பட்டா 

மக்கள் சந்திப்பு முகாமில் சத்திய மூர்த்தி நகர், காமராஜர் நகர், வள வன் நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில்  இருந்து இலவச வீட்டுமனை பட்டா மற்றும் தோராய பட்டா என பட்டா கேட்டு  50-க்கும் மேற்பட்டோர் மனு அளித்த னர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட எம்.பி. வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசி, பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என  கேட்டுக்கொண்டார். மேலும் அதில் உட னடியாக 10 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள நபர் களுக்கு விரைவில் பட்டா நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் எம்.பி.முன்னி லையில் உறுதியளித்தனர்.  மூதாட்டிக்கு உடனடி உதவி  பரவை 2பிட் ஊர்மெச்சிகுளம் காந்திநகர் பகுதியினை சேர்ந்தவர் ஆதக்காள் என்ற மூதாட்டி . 1960 இல் ஆதி திராவிடர் நல துறையில் இருந்து (சர்வே எண் 24/5-ல் பிளாட் எண் -76) அவரது கணவர் பெயரில் பட்டா  வழங்கப்பட்டது. அதனை தனது பெய ருக்கு மாற்றி பட்டா நகல் வழங்கக் கோரி மதுரை மக்களவை உறுப்பினரி டம் மனு அளித்தார். உடனடியாக அதி காரிகளிடம் பேசி, மூதாட்டி குறிப்பிட்ட  இடத்தை நேரிடையாக ஆய்வு செய்யக்  கோரினார். அதிகாரிகளும் உடனடி யாக ஆய்வு செய்து விட்டு வந்து எம்.பி யிடம் தெரிவித்தனர். பின்னர் வட்டாட்சி யர் ஒப்புதலுடன் பட்டா ஏற்பாடு செய்து ஆதக்காளுக்கு உடனடியாக பட்டா நகல் வழங்கப்பட்டது.  எஸ்டி சான்றிதழ் கேட்டு 10-க்கும் மேற்பட்டோர் மனு அளித்துள்ளனர். அவர்களுக்கு விஏஓ, தாசில்தார், வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் அனுமதி பெற்று விரைவில் அவருக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கப்படும் என்று எம்.பி.முன்னிலையில் வட்டாட்சியர் தெரிவித்தார். 

தேனூரில் பள்ளிநேரத்திற்கு பேருந்து இயக்கம்

மதுரை மாவட்டம் தேனூர் கிரா மத்திற்கு பள்ளி நேரத்திற்கு காலை 8.30 மணிக்கு வர வேண்டிய பேருந்து வரவில்லை என புகார் அளித்தனர். உடனடியாக போக்குவரத்துத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இந்த பிரச்சனை குறித்து தகவல் தெரிவிக்க சொன்னார். போக்குவரத்து துறை அதிகாரிகள் நாளை மறுநாள் முதல் (வியாழக்கிழமை) பேருந்து வரும் என்று உறுதியளித்தனர்.  பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் மின்சாரம் முறையாக வருவதில்லை என்ற புகார் மனு அளித்  தனர். உடனடியாக எம்.பி., மின்வாரிய துறை அதிகாரிகளை அழைத்து பிரச்ச னையை சரி செய்ய கேட்டுக்கொண் டார். ஒரு சில நாட்களுக்கு அதனை சரி  செய்துவிடுவோம் என்று அதிகாரிகள் கூறினர். 

வங்கிக்கடனால் தவிப்பு: எம்.பி., தலையீடு 

பரவையை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரின் மகள் சத்யா (24) பிஎஸ்.நர்சிங் படித்தவர். இவர் கனரா வங்கி யில் கல்விக்கடனாக ரூ.1 லட்சத்து 35  ஆயிரம் வாங்கினார். இந்த நிலையில்  சில மாதங்களுக்கு முன்னர் மார டைப்பால் அந்த மாணவி இறந்தார். மாணவி வாங்கிய கல்விக்கடனை கட்டச் சொல்லி வங்கிநிர்வாகம் நெருக்  கடி கொடுப்பதாக மாணவியின் பெற் றோர் எம்.பி.யிடம் மனு அளித்தார்.  மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன், வங்கி நிர்வாகத்தினை தொடர்பு கொண்டு பேசி கல்விக்கடனை தள்ளு படி செய்யக்கோரினார். அப்போது வங்கி நிர்வாகத் தரப்பில் இருந்து வட்டியை மட்டும் தள்ளுபடி செய்வதாக  தெரிவித்தனர். ஆனால் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று  எம்.பி. கேட்டுக்கொண்டார். கடைசி யாக அசலில் இருந்து 25 சதவிகிதம் மட்டுமாவது பணத்தை கட்ட வேண்டும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பின்னர் இறுதியாக அந்த மாணவி யின் தயாரை வரவைத்து பேசிக் கொள்வோம் என்று வங்கி நிர்வாகம்  தெரிவித்துள்ளது .எம்.பி அந்த மாண வியின் பெற்றோரை அழைத்து, வங்கிக்குச் சென்று என்ன சொல்லு கிறார்கள் என்று கேட்டுச் சொல்லுங் கள். தொடர்ந்து வங்கி நிர்வாகத்திடம் தொடர்பு கொள்வோம் என்று எம்.பி.கூறினார்.

அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை: சு.வெங்கடேசன் எம்.பி., 

றைவுரையாற்றுகையில், பொதுப் பணித் துறை, மின்சார துறை சார்ந்த  பிரச்சனைகளை அதிகாரிகள் தீர்ப்ப தாக கூறியுள்ளனர். அடிப்படை வசதி கள் கேட்டு மனு அளித்துள்ளனர். அது குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். சரி செய்து தருமாறு  கேட்டுக்கொண்டுள்ளோம். பெண்  குழந்தைகளுக்கான திட்டத்தில் டெபா சிட் தொகை வரவில்லை. எங்களுக்கு பின்னால் பதிந்தவர்களுக்கு வந்துள் ளது என்று புகார் வந்துள்ளது. அதனை துறை சார்ந்த மாவட்ட அதிகாரியிடம்  தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். உடனடியாக அவர்களும் தலையிட்டு  நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ள னர். எனவே அதிகாரிகள் விரைவாக சரி செய்ய வேண்டும்.  பழங்குடி இன மக்களுக்கு உத வித்தொகை வருவதில் பிரச்சனை உள்ளது. இதுகுறித்து மாவட்ட அள வில் பேசி சரி செய்வோம்! தேவைப் பட்டால் மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்த பிரச்சனை குறித்து தலையீடு செய்வோம்.  மாற்றுத்திறனாளி மாணவிக்கு உட னடியாக தையல் இயந்திரம் வழங்கி  உதவி செய்துள்ளோம். தொடர்ச்சி யாக இங்கு வந்துள்ள அனைத்து மனுக்கள் மீதும், நடவடிக்கை எடுக் கப்படும். பேரூராட்சியில் முதல் முறை யாக நடைபெறும் முகாம்.

இங்கு வந்துள்ள மனுக்களுக்கு 10 நாட்களுக் குள் ஒவ்வொரு துறையும் எந்த முறை யில் நடவடிக்கை எடுத்துள்ளது என் பதை தெரிவிக்க வேண்டுமென அதி காரிகளை கேட்டுக்கொள்கிறேன். அப்படி கொடுத்தால்தான் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடக்கக் கூடிய கூட்டத்தில் இது குறித்து பேச முடியும் .அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முகாமிற்கு ஒத்து ழைப்பு நல்கிய வருவாய்த்துறை அதி காரிகள், பேருராட்சி அதிகாரிகள், துணை இயக்குனர், செயல் தலைவர்,  மற்றும் அனைத்து துறை அதிகாரி களுக்கு வாழ்த்துக்களையும் நன்றி யினையும் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.  முன்னதாக வேளாண் துறை சார்பில் செல்லமுருகன் என்ற விவ சாயிக்கு பயிர்களுக்கு மருந்து அடிக்கு  இயந்திரம் வழங்கப்பட்டது. அதே போல் சுகாதார துறை சார்பில் கர்ப்  பிணி பெண்களுக்கு உபகரணங்களு டன் கூடிய கூடை (பெட்டகம்) வழங்கப் பட்டது. இந்த முகாமில் பேரூராட்சி இணை  இயக்குனர் என்.சேதுராமன், பேரூ ராட்சி தலைவர் டி.கலாமீனா, பேரூ ராட்சி செயல் அலுவலர் பி.ஜெய லட்சுமி,வட்டாட்சியர் திருமலை மற்றும் வருவாய துறை , பொதுப்பணித் துறை, போக்குவரத்து துறை, மின்சார துறை என 14க்கும் மேற்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ்.பாலா, எஸ்.பி. ராஜேந்திரன், மேற்கு ஒன்றியச் செய லாளர் பி.ஜீவானந்தம், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் நாகராஜ்,  பாண்டி,ஜெகநாதன், முருகேசன், நாகேந்திரன், ஜாகிர்உசேன், லெனின் இரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;