districts

மதுரை முக்கிய செய்திகள்

ஜூலை 31 வரை மக்கள்  கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம் மதுரை வீட்டுவசதி பிரிவு அறிவிப்பு

மதுரை, ஜூலை 13- தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மதுரை வீட்டு வசதி  பிரிவு செயற்பொறியாளர் (ம) நிர்வாக அதிகாரி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:  தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரையின்படி வீட்டு  வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரின் உத்தரவின்படி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வீட்டு  வசதி திட்டங்கள் செயல்படுத்திட நிலங்கள் கையகப் படுத்தப்பட்டது தொடர்பாக பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்தனர்.இதன் தொடர்ச்சியாக மதுரை வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் மதுரை, தேனி  திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலி ருந்து ஏற்கனவே மனுக்கள் 3.6.2023 முதல் 30.6.2023 வரை  பெறப்பட்டது. தற்போது மனுக்கள் பெறுவது ஜூலை மாதம் 13-ஆம்  தேதியிலிருந்து ஜூலை 31 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு  செய்து கோரிக்கை பெட்டி வைக்கப்பட்டு பொதுமக்களிட மிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட இருக்கின்றன. அது சமயம் அலுவலக வேலை நாட்களில் வீட்டு வசதி  தொடர்பான மனுக்களை பொதுமக்கள் மனு செய்து அர சிடமிருந்து தீர்வுகள் பெற்றுக்கொள்ளலாம். எனவே, மக்க ளின் குறை தீர்க்க முதல்வர் முன்னெடுப்புதிட்டம் மூலம் மனு செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த 2 பேர் பலி

விருதுநகர், ஜூலை 13- விருதுநகர் அருகே விதிமுறைகளை மீறி பட்டாசு தயா ரிப்பில் ஈடுபட்டு படுகாயமடைந்து சிகிச்சை பெற்ற இரு வரும் உயிரிழந்தனர். விருதுநகர் அருகே இராமலிங்கபுரத்தில் மீனம்பட்டி யைச் சேர்ந்த ரகு(40) என்பவர் பட்டாசு ஆலை வைத் துள்ளார். இவர் தனது ஆலையின் வெளியே இரவில் பேன்சி ரக பட்டாசு வெடிகளை தயாரித்துள்ளார். இவரு டன் முகேஷ் என்பவர் இருந்துள்ளார். அப்போது திடீரென ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், முகேஷ், ரகு ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இருவரும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இச்சம்ப வம் குறித்து அப்பையநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆண்டாள் கோவிலில்  இன்று கொடியேற்றம்

திருவில்லிபுத்தூர், ஜூலை 13- பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் திரு வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத் திருவிழா வின் துவக்க நிகழ்ச்சியான கொடியேற்றம் வெள்ளியன்று  தொடங்குகிறது திருத்தேரோட்டம் வரும் 22 ஆம் தேதி சனிக்கிழமை  காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. தேரோட்டத் திருவிழா  ஏற்பாடுகளை கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன் ,மதுரை  அறநிலைத்துறை இணை ஆணையர் க.செல்லத்துரை, கோயில் செயல் அலுவலர் மு.கரு முத்துராஜா மற்றும்  கோயில் அலுவலர்களும் திருக்கோவில் பணியாளர் களும் செய்தனர்.

ஆண்டிபட்டி, பெரியகுளத்தில் நாளை மின் தடை

 தேனி, ஜூலை 13- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி துணைமின்நிலை யத்தில் ஜூலை 15 பராமரிப்புப்பணிகள் நடைபெற உள்ளது.இதனால் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை ஆண்டிபட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபா லன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, ஏத்தக்கோவில், ராஜ தானி, பாலக்கோம்பை ஆகிய கிராமங்களிலும் , பெரிய குளம் துணைமின்நிலையம் கட்டுப்பாட்டில் உள்ள தாம ரைக்குளம் உயரழுத்த மின்பாதையில் நாளை (ஜூலை 15)  விரிவாக்கப்பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 முதல்  பிற்பகல் 2 மணி வரை பாரதிநகர், கம்பம் சாலை மற்றும்  மூன்றாந்தல் பகுதியில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று பெரியகுளம் செயற்பொறியாளர் ப.பாலபூமி தெரி வித்தார்.

கழிவுநீர் வடிகாலை தாண்ட  முயன்ற சிறுமி பலி

தேனி, ஜூலை 13- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ராஜதானி, கீழ மஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பொன்னு மணி. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இளைய மகள் சாயா ஸ்ரீ(4). இரு தினங்களுக்கு முன் செவ்வாய்க்  கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டி ருந்தார். அப்பகுதியிலிருந்த சிறிய கழிவுநீர் வடிகாலை தாண்ட முயன்ற போது தவறி கீழே விழுந்ததில் தலையில்  காயம் ஏற்பட்டது. ரத்தம் மூக்கு வழியாக வடிந்தது. அப்பகு தியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தேனி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனு மதித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று காலை சிறுமி இறந்தார். இச்சம்பவம் குறித்து ராஜதானி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நிலப் பிரச்சனையில் ஒருவர் கொலை: தம்பதிக்கு ஆயுள் தண்டனை

திருச்சுழி, ஜூலை 13-  விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே நல்லுக் குறிச்சியை சேர்ந்தவர் ராமன் (75). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சண்முகநாதன் (எ) பூசாரிக்கும் நிலப்பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில், சண்முகநாதன் மற்றும் அவரது மனைவி பஞ்சவர்ணம், மகன் ஹரிகிருஷ்ணன் (14) ஆகிய மூவரும் சேர்ந்து ராமன் என்பவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் ராமன் உயிரிழந்தார்.  இது தொடர்பாக வீரசோழன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருவில்லிபுத்தூர் வன் கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சண்முகநாதன் (எ)  பூசாரி மற்றும் பஞ்சவர்ணம் ஆகிய இருவருக்கும் தனித்  தனியான ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

விருதுநகரில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி எம்.பி. பங்கேற்பு

விருதுநகர், ஜூலை 13- காமராஜர் பிறந்தநாளையொட்டி விருதுநகரில் நடைபெறும் பொதுக் கூட் டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலை வர் கே.எஸ்.அழகரி மற்றும் ப.மாணிக்கம் தாகூர் எம்.பி ஆகியோர் பங்கேற்க உள்ள னர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ஸ்ரீராஜா சொக்கர், மேற்கு மாவட்ட தலைவர் ரெங்கசாமி ஆகி யோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ள னர். அதில் கூறியதாவது: முன்னாள் முதல்வர் காமராஜரின் 121வது பிறந்தநாளையொட்டி, விருது நகர்‌ தேசபந்து மைதானத்தில் விருதுநகர்  கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பதி னொன்றாம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது. மேலும், சுகாதாரத் துறையில் சிறப்  பாக பணியாற்றிய மருத்துவ அலுவலர்,  நகர்ப்புற கிராம செவிலியர், கிராம செவி லியர், சுகாதார ஆய்வாளர்,மருத்துவ பணி யாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர் களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும். பின்பு, நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி மற்றும் பட்டிமன்ற பேச்சா ளர் கவிதா ஜவகர் ஆகியோர் சிறப்புரை யாற்றுகின்றனர்.  மேலும் இதில், சிவகாசி சட்டமன்ற  உறுப்பினர் அசோகன், ஸ்ரீவைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் உட்பட முன்னணி தலைவர்கள் பங்கேற் கின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர். 

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அமலாக்கம்  தேனியில் முன்னேற்பாடு கூட்டம்

தேனி, ஜூலை 13- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்  செயல்படுத்துவது தொடர்பாக அனைத் துத்துறை அலுவலர்களுடனான முன்னேற்  பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சி யர் ஆர்.வீ.ஷஜீவனா தலைமையில் நடை பெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.வீ.ஷஜீவனா தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி முன்னிலை வகித்தார் . ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்கு நர் பி.மதுமதி, மகளிர் திட்ட இயக்குநர் . ரூபன் சங்கர் ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்து, கோட்டாட்சியர்கள் பால்பாண்டி (உத்தம பாளையம்), முத்து மாதவன் (பெரியகுளம்) உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசு கையில், தேனி மாவட்டத்தில் 517 நியாய விலைக் கடைகள் உள்ளன. இக்கடைகளு டன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை பணி யாளர்களால் வீடு வீடாக சென்று நேரில் வழங்கப்பட உள்ளது. இந்த விண்ணப்ப படி வங்களை உரிய முறையில் முழுமை யாக பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்து டன் வழங்கப்படும் டோக்கனில் தெரிவிக் கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் சம்பந்தப் பட்ட நியாய விலைக் கடைக்கு குடும்ப அட்டைதாரர்கள் நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.  மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்  கான சிறப்பு விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்பட்டுள் ளதை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் குடும்ப  தலைவிகள் முகாம் நடைபெறும் இடத் திற்கு செல்லும் பொழுது, குடும்ப அட்டை அசல், ஆதார் அட்டை அசல், வங்கி கணக்கு புத்தகம் அசல் மற்றும் மின்சார கட்டண ரசீது ஆகிய 4 வகையான அடை யாள அட்டைகளை அசலாக எடுத்து செல்ல வேண்டும்.  இத்திட்டம் குறித்த விவரங்களை பொது மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை  தொலைபேசி எண் 0454 250101 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

ஓய்வூதியர்கள் சங்க மாநாடு

சிவகங்கை, ஜூலை 13- தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் மானா மதுரை வட்டார மாநாடு நடை பெற்றது. மாநாட்டிற்கு ராம கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வடிவேலு, மாவட்ட செயலாளர் செல்லமுத்து மற்றும் பலர் பேசினர்.  மாநாட்டில் புதிய தலைவராக ராமனாதன், செயலாளராக காந்தி, பொருளாளராக மாத வன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். பழைய பென்சன் திட்  டத்தை செயல்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த வேண்டும் என்று வலி யுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 

பயிர்காப்பீடு உதவியாளர் பணித்தேர்வு குறித்து தவறான செய்திகளை நம்ப வேண்டாம்: தேனி ஆட்சியர் அறிவிப்பு

தேனி, ஜூலை 13- ஒன்றிய மற்றும் மாநில அர சின் பயிர்காப்பீடு வழிகாட்டு நெறி முறைகளுக்கு முற்றிலும் முர ணாக உள்ள பயிர்காப்பீடு உதவி யாளர் பணித்தேர்வு குறித்து பர வும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்று தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.  பாரத பிரதமரின் பயிர் காப்பீடு  திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட காப்பீட்டு நிறுவனங்கள்  ஒன்றிய அரசின் வேளாண்மை மற் றும் உழவர் நலத்துறையில் கட்டா யம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.  மத்திய கூட்டுறவுத் துறையின்  கீழ் பதிவு செய்த கூட்டுறவு சங்கங்  கள் காப்பீடு நிறுவனங்களாக செயல்பட ஒன்றிய அரசால் இது நாள் வரை ஒப்புதல் வழங்கப்படு வதில்லை.  எனினும், தற்போது பாரதிய கூட்டுறவு பொதுகாப்பீடு நிறுவ னம் சார்பில் பாரத பிரதமரின்  பயிர் காப்பீடு திட்டத்தில் செயல் பட 829 பயிர் காப்பீடு உதவியாளர் பணியிடத்திற்கு பணித்தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், இதற்கு தகுதியானவர்கள் ரூ. 250- விண்ணப்பத் தொகை செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்ற தவறான தகவல் பரவி வரு கிறது.  ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறாத, பயிர் காப்பீடு வழிகாட்டு  நெறிமுறைகளுக்கு முரணாக செயல்படும், இந்த பயிர் காப்பீடு  உதவியாளர் பணிக்கு விண்ணப்  பிக்கலாம் என்ற தவறான தகவ லினை யாரும் நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித் துள்ளார்.

பணமோசடி: நியோமேக்ஸ் நிறுவன  இயக்குனர் உட்பட இருவர் கைது

மதுரை, ஜூலை 13-  முதலீடு செய்யும் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகக்கூறி  மக்களிடம் பல கோடி ரூபாயை முதலீடாகப் பெற்றது நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம். ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் மோசடி யில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள் மதுரை பொருளாதார  குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் நியோ மேக்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான வீரசக்தி உள்ளிட்ட சிலர் மீது  பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு விலை உயர்ந்த கார்கள், தங்கம்,  ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நியோமேக்ஸ் நிதி நிறுவன திருநெல்வேலி கிளை இயக்குனர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சார்ந்த சைமன் ராஜா மற்றும் தேவகோட்டை பகுதியைச் சார்ந்த கபில்  என்கின்ற முகவர் ஆகிய இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களை மதுரை பொரு ளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.