மதுரை, செப்.6- மதுரை மாநகராட்சி 39 ஆவது வார்டு அண்ணா நகர் யானைக் குழாய் - யாகப்பா நகர் மெயின் ரோடு சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாக மிக மோசமாக உள்ளது. பள்ளி மாணவர்கள் இந்த சாலையில் தான் செல்கிறார்கள். சில நேரங்களில் அப்பகுதி வழியாக வாகனங்கள் வேகமாக வரும் போது பள்ளி மாணவர்களின் சீருடை மீது சகதி தெறிக்கிறது. சைக்கிளில் செல்லும் மாணவர்கள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். மழைக்காலம் என்பதால் மதுரை மாநகராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்க வேண்டும் என்று மாணவர்களும் மக்களும் வலியுறுத்தினர்.