districts

மதுரை விரைவு செய்திகள்

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

தூத்துக்குடி, நவ.22- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அய்யனார் காலனியைச் சேர்ந்தவர் பொன் முனியசாமி. இரர் வெளிநாட்டில் வேலைபார்த்து வரு கிறார். இவரது மனைவி பொன் இசக்கி (30). தூத்துக்குடி விமான நிலை யத்தில் பணிபுரிந்து வருகிறார்.  இவருக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறு வனத்தின் மேலாளராக பணிபுரிந்த சுரேஷ் என்பருக்கும் பழக்கம் இருந்துள்ளது. பின்னர் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சுரேஷ் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பொன் இசக்கி அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு காவல்துறையினர் சுரேஷை கைது செய்தனர். இந்நிலையில், ஜாமீனில் வெளி வந்த சுரேஷ் மீண்டும், பொன் இசக்கி க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொன் இசக்கி திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள் ளார்.  இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையி னர் அவரை தடுத்து நிறுத்தி, விசாரணை க்கு அழைத்துச் சென்றனர்.

புகையிலை விற்பனை  செய்தவர் கைது

தூத்துக்குடி, நவ.22- தூத்துக்குடி அருகே பெட்டிக்கடை யில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப் பிடாரம் காவல்துறையினர் ஞாயிறன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாலசமுத்திரம் பகுதியில், குறுக்குச் சாலை பகுதியை சேர்ந்த முனியதுரை (53) என்பவர் தனது பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.  இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 600 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை :  போக்சோவில்  ஒருவர் கைது

தூத்துக்குடி, நவ.22- தூத்துக்குடியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப் பட்டார். தூத்துக்குடி வடக்கு சிலுவைபட்டி, சுனாமி காலனியை சேர்ந்தவர் அந்தோணி சாமி மகன் ஜேசுராஜ் (28). இவர் ஒன்றாம்  வகுப்பு படிக்கும், 5 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படு கிறது.  இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் காவல்துறையினர், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து ஜேசுராஜை கைது செய்தனர்.

லாரி திருட்டு  இருவர் கைது

தூத்துக்குடி, நவ.22- தூத்துக்குடியில் லாரியை திருடிச் சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி போல்பேட்டை பகுதி யைச் சேர்ந்த முருகன் (59) என்பவர் தனக்கு சொந்தமான லாரியை சனிக் கிழமையன்று அவரது வீட்டின் பின்புறம் நிறுத்தியுள்ளார். இந்த லாரியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வடபாகம் காவல் நிலை யத்தில் முருகன் புகார் அளித்தார். அதன்பேரில் உதவி ஆய்வாளர் சிவ ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதில் ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (24), முத்து கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த செல்வம் (28) ஆகிய இருவரும் சேர்ந்து லாரியை திருடியது தெரியவந்தது.  இதையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் திருடப்பட்ட ரூ.2.75 லட்சம் மதிப்பிலான லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம் நிரம்பியது : விவசாயிகள் மகிழ்ச்சி

திருநெல்வேலி, நவ.22- வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம் நிரம்பியதால் விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள குளங்களில் வடக்கு விஜய நாராயணம் பெரியகுளம் மிகப்பெரிய குளம் ஆகும். இந்த ஆண்டு பருவமழை வடக்கு விஜயநாராயணம் பகுதியில் குறைவாக பெய்தது. ஆனாலும்  நம்பியாறு பகுதியில் பெய்த  பலத்த மழையால், நம்பி யாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.  மேலும் ஆற்றில் இருந்து விஜயங்காலில் அதிக அளவு தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் வடக்கு விஜயநாராயணம் பெரியகுளத்திற்கு வந்து சேர்ந்தது. இந்நிலையில், சனிக்கிழமை யன்று வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம் நிரம்பி தண்ணீர் மறுகால் சென்றது. பட்டஞ்சேரி குளம் ஏற்கனவே நிரம்பி உள்ள தால் அங்கிருந்து விஜயஅச்சம் பாடு குளத்திற்கு தற்போது தண்ணீர் செல்கிறது.  போதிய மழை பெய்யாத சூழ்நிலையிலும் வடக்கு விஜய நாராயணம் பெரியகுளம் நிரம்பி யதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை திருமண்டல  16ஆம் பேராயர் பர்னபாஸ் பதவியேற்பு

திருநெல்வேலி, நவ.22- நெல்லை திருமண்டலத்தின் 16வது பேராயராக ஏ.ஆர்.ஜி.எஸ்.டி பர்னபாஸ் பதவி யேற்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது.  நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் பிஷப் பெயர் பட்டியல் தேர்வு கடந்த செப்டம் பர் மாதம் நடைபெற்றது. இதையடுத்து தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் தர்மராஜ் ரசாலம் தலைமையில் தேர்வு குழு கூட்டம் நடைபெற்றது.  இதில் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி. பர்னபாஸ் ஒரு மனதாக புதிய பிஷபாக தேர்வு செய்யப் பட்டார். இதையடுத்து நெல்லை திரு மண்டலத்தின் 16-வது பிஷப் ஆக பர்னபாஸ் பதவியேற்பு நிகழ்ச்சி பாளையங்கோட்டை கதீட்ரல் பேராலயத்தில் ஞாயிறன்று நடை பெற்றது.  இதற்கு, தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் தர்மராஜ் ரசாலம் தலைமை வகித்தார். இதில், திருச்சி- தஞ்சை பிஷப்பும், நெல்லை திருமண்டல பொறுப்பு பிஷப்பாக இருந்த சந்திரசேகரன், பிஷப்கள் தேவசகாயம் (தூத்துக்குடி), செல்லையா (கன்னியாகுமரி), ஜோசப் (மதுரை), ஜார்ஜ் ஸ்டீபன் (சென்னை), தீமோத்தேயு ரவீந்திரன் (கோவை) உள்பட தமிழ்நாடு, கேரள மாநிலங்களைச் சேர்ந்த பிஷப்புகள் கலந்து கொண்டனர்.

;