districts

மதுரை முக்கிய செய்திகள்

தீக்கதிரில் சிபிஎம்  கிளை மாநாடுகள் 

மதுரை, டிச.7-   தீக்கதிர் மதுரை பதிப்பு அலுவல கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கிளை மாநாடுகள் நடைபெற்றன.   ஆசிரியர் குழு கிளைச் செயலாள ராக எஸ்.பி.ராஜேந்திரன், நிர்வாகப்பிரிவு கிளைச் செயலாளராக ஜோ.ராஜ் மோகன், ப்ரீ பிரஸ் கிளைச் செயலா ளராக ஏ.ஆறுமுகம், அச்சகப்பிரிவு கிளைச் செயலாளராக எஸ்.பி.மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

ஊராட்சி தலைவர்களுக்கு மதிப்பூதியம் ரூ.2000 அரசாணை வெளியீடு

நாகர்கோவில், டிச. 7- கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப் படும் மதிப்பூதியத்தை ரூ.2000 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கிராம ஊராட்சிகளின் செயல் அலுவலர்களாக உள்ள கிராம ஊராட்சி தலைவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் மாதாந்திர மதிப்பூதியத்தை ரூ.1000 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தி, அரசாணை (நிலை) எண் 132, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (பரா-4) துறை நாள் 15.11.2021- இன்படி தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.

இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் வியாபாரிகள்  3 பேர் கைது

நாகர்கோவில், டிச. 7- திருவட்டார் பகுதியில் கஞ்சா விற்ற மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவட்டார் காவல் நிலையத்தினர் அங்குள்ள சந்தை அருகில் வாகன சோத னையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவரிடம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் கல்லாம்பொற்றையை சேர்ந்த ஜோஸ் என்பதும், இவரும், இவரது தம்பி சுபின் (25) மற்றும் சாமியார்மடம் பகுதியை சேர்ந்த பரோஸ்கான் ஆகியோர் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து சுபின், பரோஸ்கான் ஆகியோரையும் காவல்துறையினர் பிடித்தனர். மூவரிடம் இருந்தும் மொத்தம் இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாகர்கோவில், டிச. 7- கன்னியாகுமரி மாவட்டம் நித்திர விளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப் பட்டனர். இந்த சம்பவம் குறித்து கூறப்படுவ தாவது: குமரி மாவட்டத்தில் இருந்து கடற்கரை கிராமங்கள் வழியாக கேர ளாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திங்களன்று அதிகாலையில் நித்திரவிளை காவல் துறையினர் நித்திரவிளை அருகே உள்ள நடைக்காவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக கேரளாவை நோக்கி 2 சொகுசு கார்கள் வேகமாக சென்று கொண்டிருந்தன. அவற்றின் மீது சந்தேகம் அடைந்து நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால், கார்கள் நிற்காமல் வேகமாக சென்றன. இதையடுத்து காவல்துறை யினர் துரத்திச் சென்று நம்பாளி பகுதி யில் வைத்து கார்களை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து அவற்றை சோதனை யிட்ட போது சிறு, சிறு மூடைகளில் மொத்தம் 2 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து கார்களு டன் ரேசன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கார்களை ஓட்டி வந்த நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த ராஜவேல் (47), தக்கலை மருதூர்குறிச்சி பகுதியை சேர்ந்த விமல் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி, கார்கள் மற்றும் கைது செய்யப்பட்ட இருவரை யும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கனமழையால் வீட்டுச்  சுவர்கள் இடிந்து விழுந்தன

கடமலைக்குண்டு, டிச.7- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடந்த சில நாட்களாக பர வலாக அனைத்து கிராமங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பாலூத்து கிராமத்தில் வீட்டுச் சுவர்கள் இடிந்து விழுந்தன.  இதேபோல கடமலைக் குண்டு, தேவராஜ்நகர், மயிலாடும் பாறை, மூலக்கடை, வருசநாடு, கோம் பைத்தொழு, குமணன்தொழு, தண்டி யக்குளம், வாலிப் பாறை உள்ளிட்ட கிராமங்களில் 15க்கும் மேற்பட்ட வீடுகள் மழையால் சேதமடைந்துள் ளன.  மழையின் காரணமாக வாலிப் பாறை,சீலமுத்தையாபுரம், முருக் கோடை உள் ளிட்ட பகுதிகளில் ஏராள மான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கின.  எனவே சம்பந்தப்பட்ட வருவாய்  துறையினர் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டு மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு உரிய நிவா ரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா ஒமைக்ரான் சிகிச்சைக்கு 800 படுக்கைகள் தயார்

நாகர்கோவில், டிச. 7- நாகர்கோவிலில், ஒரே குடும் பத்தில் உள்ள 6 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறி யப்பட்டது, அவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் கவரிங் நகைக்கடை ஊழியர் ஒருவரும் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். குமரி மாவட்டத்தில் கொரோ னாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதா ரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள். இந்தநிலையில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வைர சால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்தும் சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். ஆசாரிபள்ளம் அருகே ஞானம்நகர் பகுதியில் உள்ள ஒரு முதியவருக்கு காய்ச்சல் இருந்தது. இதையடுத்து அவ ருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் அவ ருடைய மனைவி, 2 மகன்கள், மருமகள் மற்றும் பேரக் குழந்தைக்கும் சோதனை நடந்தது. இதில் 6 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி நலஅதிகாரி விஜய் சந்திரன் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திங்களன்று ஞானம் நகர் பகு திக்கு சென்று கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற் கொண்டனர். பிளீச்சிங் பவுடரும் தூவப்பட்டது.கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேரும் நாகர் கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு, சிகிச்சை அளிக்கப் படுகிறது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேர்க ளுக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதேபோல் நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள ஒரு கவரிங் நகைக்கடை ஊழி யருக்கும் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அந்த ஊழியர் நெல்லை மாவட்டம் மூலக்கரைபட்டியை சேர்ந்தவர் ஆவார். அதைத் தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் கடை முழு வதும் கிருமி நாசினி தெளித்து, கடையை பூட்டினர். மேலும் கடை யில் பணியாற்றும் ஊழியர்கள் 8 பேருக்கு சளி பரிசோதனை நடத்தப்பட்டது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே கடையில் உள்ள ஊழியர்கள் 3 பேருக்கு தொற்று பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ மனையில் ஒமைக்ரான் பாதிப்பு க்கு சிகிச்சை அளிக்க சுமார் 800 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட 12 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்ட 11 திட்டங்கள்

நாகர்கோவில், டிச. 7- கன்னியாகுமரி மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழையினால் ஏற்பட்ட வெள்ள தாக்கத்தினால் குடிநீர்  வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்ற மொத்தமுள்ள பன்னிரண்டு  கூட்டுக் குடிநீர்த் திட்டங்களில் பதினொரு குடிநீர்த் திட்டங்கள் பாதிக்கப்பட்டு பொது மக்களுக்கு முறையான குடிநீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரியத்தின்  இணை மேலாண்மை இயக்குநர் மா.பிரதீப் குமார், மற்றும்  பெ.மணிமோகன், தலைமைப் பொறியாளர், மதுரை மற்றும் இரா.இராஜசேகர், மேற்பார்வைப் பொறியாளர், திருநெல்வேலி ஆகியோர் தல ஆய்வு மேற்கொண்டு உரிய அறிவுரைகளை வழங்கியதன் தொடர்ச்சியாக குடிநீர் வடிகால் வாரியம் துரிதமாக செயல்பட்டு பதினொரு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எஞ்சிய ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டமான வேர்க்கிளம்பி மற்றும் 6 பேருராட்சிகள் மற்றும் 26 வழியோர குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் வெள்ள பாதிப்புகளை சரி செய்யும்  பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.   விரைவில் இத்திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. இவ்வாறு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப்பொறியாளர் தெரிவித்துள்ளார்.