தேனியில் நாளை 385 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்
தேனி ,டிச.24- தேனி மாவட்டத்தில் வருகிற ஞாயி றன்று 385 மையங்களில் 16-வது மாபெ ரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சி கள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிப் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதி களிலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத விடுபட்ட நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் (26.12.2021) அன்று ஞாயிற்றுக்கிழமை 16-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளது. அதன்படி, ஆண்டிபட்டி வட்டாரத் தில் 63 இடங்களிலும், போடிநாயக்கனூர் வட்டாரத்தில் 60 இடங்களிலும், சின்ன மனூர் வட்டாரத்தில் 44 இடங்களிலும், கம்பம் வட்டாரத்தில் 44 இடங்களிலும், க.மயிலாடும்பாறை வட்டாரத்தில் 27 இடங்களிலும், பெரியகுளம் வட்டா ரத்தில் 60 இடங்களிலும், தேனி வட்டா ரத்தில் 49 இடங்களிலும், உத்தமபாளை யம் வட்டாரத்தில் 38 இடங்களிலும் என மொத்தம் 385 இடங்கள் தேர்வு செய்யப் பட்டு, மாபெரும் தடுப்பூசி முகாம்களின் மூலம் 1,08,900 கோவிஷீல்டு தடுப்பூசி களும், 37,050 கோவாக்சின் தடுப்பூசிக ளும் என மொத்தம் 1,45,950 தடுப்பூசிகள் செலுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
அச்சகத்தில் ரூ.50 ஆயிரம் திருட்டு
சிவகாசி, டிச.24- சிவாசியில் தனியார் அச்சகத்தின் உள்ளே இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மாயமானது. சிவகாசி காளியப்பன் தெருவைச் சேர்ந்தவர் அற்புதராஜ்(54). இவர் தெய் வானை நகர் பகுதியில் அச்சகம் மற்றும் நெகிழி நிறுவனம் வைத்துள்ளார். இவர் வழக்கம் போல பணிமுடிந்து இரவு அச்சகத்தை பூட்டி விட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்த போது, கதவு திறக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, மேஜை யின் உள்ளே இருந்த ரூ.50 ஆயிரம் பணம் திருடு போது தெரிய வந்தது. எனவே,இதுகுறித்து அற்புதராஜ், சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பாம்பு கடித்து பெண் பலி
திருச்சுழி, டிச.24- திருச்சுழி அருகே பாம்பு கடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். திருச்சுழி அருகே உள்ளது எம்.ரெட்டியபட்டி. இப்பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மனைவி சுகந்திரா(50). இருவரும், மறவர்பெருங்குடி சாலை யில் உள்ள உளுந்தக் காட்டில் செய்து கொண்டிருந்தார்களாம். அப்போது, சுகந்திராவை இனம் தெரியாத பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதையடுத்து, வலி யால் துடித்த அவரை, கருப்பசாமி, எம். ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முதுலுதவி சிகிச்சையளித்த மருத்துவர், மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு சுகந்திராவை அனுப்பி வைத்தார். ஆனால், செல்லும் வழி யிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து எம்.ரெட்டியபட்டி போலீசார்வழக் குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தமிழகத்தில் வசிக்கும் மொத்த யானைகள் 4,200
திருவில்லிபுத்தூர், டிச.24- திருவில்லிபுத்தூர் வன விரிவாக்க மைய அலுவலகத்தில், யானைகளின் வழித்தடங்களை பாதுகாப்பது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில், யானைகளின் வழித்தடங்களை பாதுகாப்பது குறித்தும், மனித - விலங்கு மோதலை தடுப்பது குறித்தும் விரிவாகப் பேசப்பட்டது. மேலும், இந்தியாவை பொறுத்தவரை யானைகளுக்கு 101 வழித்தடங்கள் உள்ள தாகவும், அதில் தமிழகத்தில் மட்டும் 16 வழித்தடங்கள் உள்ளதாகவும், விருது நகர் மாவட்டத்தில் இராஜபாளையத்தி லிருந்து சாப்டூர் அருகே உள்ள கோட்டை மலை வரை ஒரு யானை வழித்தடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், தமிழக வனப் பகுதி யில் 4,200 யானைகள் இருப்பதாகவும், இந்தியாவில் சுமார் 21ஆயிரம் யானைகள் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப் பட்டது. இதில், ஐ.யு.சி.என். என்ற அமைப்பைச் சேர்ந்த விவேக் மேனன், திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமார், வைல்டு லைஃப் டிரஸ்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த சந்திப், மதுரை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் அழகு முத்து, இராஜபாளையம் வன உயிரின ஆர்வலர் சுப்ரமணியராஜா, வன விரிவாக்க மைய அலுவலர் பால்பாண்டி யன் மற்றும் திருவில்லிபுத்தூர் வனத் துறை வன அலுவலர் (பொறுப்பு)செல்ல மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சூரியகாந்தி விதைகளை மானிய விலையில் வழங்கிடுக! விருதுநகர் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
விருதுநகர், டிச.24- அமெரிக்கப் படைப் புழுக்களால் மக்காச்சோளப் பயிர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சூரிய காந்தி பயிரிட மானிய விலையில் விதைகள் வழங்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்டஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில், வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட வரு வாய்த்துறை அலுவலர், பொதுப் பணித்துறை அதிகாகிள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். விவசாயிகள் கூறியதாவது:- உரம் மற்றும் மருந்து விற்பனை நிலையங்களில் முறையான கல்வித் தகுதி உடையவர்களை நியமிக்க வேண்டும். யூரியா வாஙகும்போது சல்பேட் வாங்க வற்புறுத்துகின்றனர், தேவையற்ற பூச்சிக் கொல்லி மருந்து களை வழங்குகின்றனர். அதேபோல் உரக் கடைகளில் உரம் இருப்பு குறித்த விபரப் பலகை வைக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து பேசிய ஆட்சியர், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உர விற்பனை நிலையங்களை முறைப் படுத்தப்படுவதுடன் தொடர்ந்து கண்கா ணிக்கப்படும் என்றார். நிகழாண்டு பருவமழை அதிக அளவில் பெய்த போதும், மக்காச் சோளப் பயிர்களில் படைப் புழுக்களின் தாக்குதல் குறையவில்லை. இதனால் வேளாண் அலுவலர்கள் அறிவுறுத்த லின் பேரில் மாற்றுப் பயிர்களுக்கு விவ சாயிகள் மாறி வருகின்றனர். பல ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டத்தில் சூரியகாந்தி பயிரிடப்பட்டு வந்த நிலையில், காலப் போக்கில் குறையத் தொடங்கியது. இதனைப் பயிரிட மானிய விலையில் சூரியகாந்தி விதைகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியர் கூறினார். முடுக்கன் குளம் கண்மாயில் குடி மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது இரு போகம் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்தக் கண்மாயில் உள்ள இரண்டு மடைகள் பழுதடைந்துள்ளது. அதை உடனடியாக சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலளித்த ஆட்சியர், பொதுப்பணித்துறை மூலம் மடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கண்மாய் ஆக்கிரமிப்பு, வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்கு இல்லாத இடங்களில் விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார். காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்கு களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு கோரி விண்ணப்பித்த விவசா யிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அதற்கு பதில் கூறிய ஆட்சியர், காட்டுப்பன்றிகளை சுட்டுபிடிக்க அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை செய லருடன் பேசப்படும்.இழப்பீட்டுத் தொகை கிடைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார். முக்குளம் அருகே உள்ள அழகாபுரி கடன் சங்கத்தில் நகைகளை அடமானம் வைத்தவர்கள், நகையைத் திரும்ப வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பேசிய ஆட்சியர், அழகாபுரி கூட்டுறவு சங்க நகை பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது என்றார்.
டிச.27 இல் மின்தடை
திருவில்லிபுத்தூர்,டிச. 24- திருவில்லிபுத்தூர் மின் வினி யோக கோட்டத்திற்குட்பட்ட மல்லி புதூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறக் கூடிய பகுதிகளான மல்லி புதூர் மல்லி பகுதி அப்பநாயக்கன்பட்டி, நக்கமங்கலம், சாமிநாதபுரம், மாயத் தேவன் பட்டி, சிவா நகர், நாக பாளை யம், ஈஞ்சார் ராஜா நகர் ,வேண்டு ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் டிசம்பர் 27 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று திரு வில்லிபுத்தூர் கோட்ட செயற் பொறி யாளர் சின்னத்துரை தெரிவித்துள் ளார்.
பாலியல் வல்லுறவு செய்தவர் மீது வழக்கு
விருதுநகர், டிச.24- விருதுநகர் அருகே இளம் பெண்ணை ஏமாற்றி பாலியல் வல்லுறவு செய்தவரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். விருதுநகர் தவசிலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டி யம்மாள் (23). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அடைக்கல ராஜ் என்பவரும் காதலித்து வந்துள்ளர். இந்நிலையில, அடை க்கலராஜ், பாண்டியம்மாளிடம் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. எனவே, அடைக்கலராஜின் உறவினர்களிடம் கூறிய போது,ஒரு வருடம் கழித்து பாண்டியம்மாளை திருமணம் செய்து கொள்வ தாக காவல்துறையினர் முன்னிலையில் உறுதியளித்துள்ளனர். இந்த நிலையில் அடைக்கலராஜ், பாண்டியம்மாளை திரு மணம் செய்ய மறுத்த தோடு, அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் விருதுநகர் அனைத்து மகளிர் காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து அடைக்கலராஜை தேடி வருகின்றனர்.
போக்சோவில் ஒருவர் கைது
விருதுநகர், டிச.24- விருதுநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் கடையில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது தாயார் மகளிடம் விசாரித்த போது, தான் வேலை பார்க்கும் கடைக்கு எதிரே உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் போத்தநேரியைச் சேர்ந்த அழகுராஜா (19) என்பவர் காதலித்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் தாயார் விருதுநகர் கிழக்கு காவல் துறையில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அழகுராஜாவை கைது செய்தனர்.