districts

மதுரை முக்கிய செய்திகள்

கார் மோதி விபத்து:  காவலர்கள் படுகாயம்

அருப்புக்கோட்டை, செப்.5- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 காவ லர்கள் காயமடைந்தனர். அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலவநத்தம் பகுதியிலிருந்து அருப்புக்கோட்டை நோக்கி கார் ஒன்று  சென்று கொண்டிருந்தது. நமச்சிவாயபுரம் விலக்கு அருகே கார் சென்ற போது அங்கிருந்த பாலத்தின் மீது மோதியது.  இந்த விபத்தில் காரில் பயணம் செய்த காரியாபட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களான ரமேஷ்  (40), மணிகண்டன் (45) ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர், இரு வரையும் மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அருப்புக்  கோட்டை தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனுமதி இன்றி  மது  விற்றவர் கைது 

திருவில்லிபுத்தூர், செப்.5- திருவில்லிபுத்தூர் இந்திரா நகரில் வசிப்பவர் பாண்டி (36). இவர் சம்பவத்தன்று மொட்ட மலை அருகே அரசு  அனுமதி இன்றி மது விற்பதாக வன்னியம்பட்டி காவல்  துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு  சென்ற காவல்துறையினர், பாண்டியனை கைது செய்து  அவரிடமிருந்த 80  மது பாட்டில்களையும், ரூ.7,970-யும்  கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றார்.

எரிந்த நிலையில்  முதியவர் சடலம் மீட்பு

திருவில்லிபுத்தூர், செப்.5- விருதுநகர் அருகே உள்ள பெரிய தாதம்பட்டியைச் சேர்ந்தவர் ராமராஜ் (68) மனநிலை சரியில்லாதவர்.  இவர் சம்பவத்தன்று திருவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள பாட்ட குளத்தில் உள்ள தனது  தங்கை சரஸ்வதி வீட்டிற்கு வந்தார். ஞாயிறன்று இரவு  சாப்பிட்டுவிட்டு வெளியே சென்றவர் திடீரென மாயமா னார். அவரை பல இடங்களில் தேடி கிடைக்காத நிலை யில் சரஸ்வதி வீட்டிற்கு எதிரே புதிதாக கட்டப்பட்டு வரும் மண்டபத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

ஆத்தூர் காமராஜர்  நீர்த்தேக்கம் நிரம்பியது

சின்னாளபட்டி, செப்.5- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்  கத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆட லூர், பன்றிமலை, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லா வெளி, தாண்டிகுடி உள்ளிட்ட மலைகிராமங்களில் பெய்யும் மழை நீர் அணைக்கு வரும்படி இயற்கை யாகவே நீர்வரத்து வாய்க்கால்கள் அமைந்துள்ளது.  மொத்தம் 23.5 அடி உயரத்திற்கு நீர் தேங்கும் கொள்ள ளவுள்ள காமராஜர் நீர்த்தேக்கத்திலிருந்து திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் திண்டுக்கலுக்கு தண்ணீர் செல்லும் வழி கிராமங்களாக ஆத்தூர், வக்கம்பட்டி, பித்த ளைப்பட்டி, பிள்ளையார்நத்தம் மற்றும் சின்னாளபட்டி பேரூராட்சிகளுக்கு குடிதண்ணீர் செல்கிறது.  தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் காமரா ஜர்நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வந்தது. ஞாயிறன்று பெய்த தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காலை 6 மணியள வில் தண்ணீர் மறுகால் வழியாக வெளியேற தொடங்கி யது. தண்ணீர் மறுகால் பாய்ந்து செல்வதால் விவசாயி கள் மற்றும் குடகனாறு வழியோர கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

;