districts

img

கே.வி.எஸ் மண்டல விளையாட்டுப் போட்டிகள் மதுரை அணிக்கு தங்கம்

சென்னை, ஜூலை 31- கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக் கான மாநில அளவிலான மண்டல விளையாட்டுப் போட்டிகள் சென்னை அசோக் நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.

இந்த விளையாட்டுப் போட்டியில் 14 வயதுக்குட்பட்ட கூடைப்பந்து பிரிவில் அபார ஆட்டத்தை வெளிப் படுத்திய மதுரை நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி அணி, கோவை சூலூர் பள்ளி அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்று அசத்திய நிலை யில், அணியில் இடம்பெற்ற எஸ்.கே.ஜே.தன்யஸ்ரீ, ஆர்.எஸ்.பாலபாரதி, லசிரா, தன்யா, ஸ்ருதிலயா, ஜெய ஸ்ரீ,  சஞ்சனா, ஜோஷிதா, காயத்ரி, விஷாலி, வைஷ்ணவி, பிரக்தி ஆகிய மாணவி  களுக்கு தங்கப்பதக்கமும், சான்றிதழ் களும் வழங்கப்பட்டன. மாநிலப் போட்டியில் முதலிடம் வென்ற மதுரை நரிமேடு கேந்திரிய வித்யாலயா அணி வரவிருக்கும் தேசிய அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.