அருமனை, செப்.12- கன்னியாகுமரி மாவட் டம் அருமனை முழுக்கோடு ஊராட்சி பகுதிகளில் ஒன்றிய கவுன்சிலர் டி. பேபி தலைமையில் மக்கள் சந்திப்பு நடை பயணம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முழுக் கோடு ஊராட்சி தலைவர் சி.மரிய செல்வி விலாசினி முழுக்கோடு ஊராட்சி துணைத் தலைவரும் மார்க்சிஸ்ட் கட்சி அருமனை வட்டாரச் செயலாளருமான சி.சசிகுமார், கடையல் வட்டார செயலாளர் பி.சசி குமார், மாநில குழு உறுப்பி னர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.தங்கமோகன் உள் ளிட்டோர் பங்கேற்றனர். மஞ்சாலுமூடு சந்திப்பிலி ருந்து துவங்கி முழுக்கோடு ஊராட்சியின் அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்து மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.