நத்தம், ஜூலை 2- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுகுறிச்சி யில் கபாடி போட்டி நடைபெற்றது. ஒத்தினிப்பட்டி அணி முதல் பரிசையும், நத்தம் என்சிசி அண்ணாநகர் அணி 2வது பரிசையும், பரளிபுதூர் அணி 3 ஆம் பரிசையும், கோசுகுறிச்சி அணி 4 ஆம் பரிசையும் வென்றன. வெற்றிபெற்ற அணியினருக்கு கோப்பைகளும், கேட யங்களும் வழங்கப்பட்டன. இதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆண்டிஅம்பலம், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர்பாட்சா, திமுக வடக்கு ஒன்றிய பொருளாளர் கலிபுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.